அதிமுக அலுவலகத்திற்கு செல்ல தடையா..? ஓபிஎஸ் போகாதது ஏன்.?ஆதவாளர் கூறிய பரபரப்பு தகவல்

Published : Nov 25, 2022, 10:17 AM IST
அதிமுக அலுவலகத்திற்கு செல்ல  தடையா..? ஓபிஎஸ் போகாதது ஏன்.?ஆதவாளர் கூறிய பரபரப்பு தகவல்

சுருக்கம்

அதிமுக தலைமை அலுவலகத்திற்க்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செல்ல கூடாதுயென  நீதிமன்ற உத்தரவோ அரசானையோ உள்ளதா என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒற்றை தலைமை மோதல் காரணமாக அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் சென்றபோது வன்முறை ஏற்பட்டு அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் செல்லாத நிலையே தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வந்திருந்தார், தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி சென்றுள்ளதால்,  துணை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் 26,27, தேதிகளில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது,  அன்றைய தினம் தங்கள் அணியினர்  பணியாற்றும் வகையில் 
 வாக்காளர் பெயர் சேர்ப்பு நீக்க மற்றும் திருத்த பட்டியலை ஓபிஎஸ் அணியினருக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை மனுவை அளித்தார். 


இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் ஆணையம் அதிமுக தலைமை அலுவலகத்திற்க்கு மட்டும் வாக்காளர் திருத்த பட்டியலை அனுப்பியுள்ளனர், அங்கு ஓ பன்னீர்செல்வம் அணியினர் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக கூறுவதால் நாங்கள் செல்லவில்லை, ஆகவே தங்கள் அணியினருக்கும் தேர்தல் ஆணையம் புகைபடத்துடன் கூடிய  வாக்காளர் திருத்த பட்டியலை வழங்க வேண்டுமென மனு கொடுத்ததாக கூறினார். அதிமுக அலுவலகத்திற்க்கு ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்   யாரும் செல்ல கூடாது என எந்த ஆணையும் யாரும் பிறபிக்கவில்லை என்று கூறியவர்,

கடந்த முறை சாதாரணமாக சென்றதற்கு அடிக்க வந்ததாக புகார் கொடுத்துள்ளனர். தேவையில்லாத பிரச்சினை வேண்டாம் என்பதன் காரணமாகத்தான் அதிமுக தலைமை அலுவலகம் செல்லவில்லை என கூறினார். எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலையை கொடுத்தது போல் பேசுகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீதிமன்ற உத்தரவை பொறுத்தே எங்கள் தரப்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!