MK Stalin : முதல்வருக்கு இந்த விஷயம் தெரியாதா ? அனுமதியின்றி இடிக்கப்பட்ட வீடுகள்.. கொளத்தூர் தொகுதியில் அவலம்

By Raghupati R  |  First Published Dec 14, 2021, 12:42 PM IST

முதல்வர் தொகுதியில் அறிவிப்பில்லாமல் இடிக்கப்பட்ட வீடுகளால், கொளத்தூர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


முதல்வரின் தொகுதியான கொளத்தூரில்  60 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் வீடுகளை தேவையான நிலம் பற்றி முறையான அறிவிப்பின்றியும்  மாற்று இடம் ஏதும் ஒதுக்காமலும் பாலம் கட்ட இடிப்பதைக் கண்டித்து பொதுமக்கள் தர்ணாவில் இன்று ஈடுபட்டுள்ளனர். முதல்வர் மு.க ஸ்டாலினின்   தொகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பொதுமக்கள் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

சென்னை கொளத்தூர் பகுதி, அவ்வை நகர் முதலாவது குறுக்குத்தெரு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகள் மேம்பாலம் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதாககூறி அரசு அளித்த வாக்குறுதிகளை மீறி முழுவதும் இடிக்கப்பட்டுள்ளது. 

மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும், முறையான அறிவிப்பும் இன்றி இடித்த அரசை கண்டித்தும், பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.  இதுகுறித்து பேசிய மக்கள், ‘ஆட்சிக்கு வந்து 6 மாதங்களில் சிக்ஸர் அடிக்கும் முதல்வர் என்று அனைவரும் பாராட்டி கொண்டிருக்கின்றனர்.ஆனால் இதுதான் உண்மையான சிக்ஸர். 

மக்களுக்கு முறையான அறிவிப்பு இன்றி முதல்வர் தொகுதியில் இப்படி நடந்து கொள்கிறார்கள் அரசு அதிகாரிகள். இந்த விஷயம் முதல்வருக்கு தெரியாதா ? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள். மக்களின் முதல்வர், மக்களின் மனசாட்சியாக செயல்படுகிறார் முதல்வர் என்று புகழப்படும் முதல்வர் ஸ்டாலினின் தொகுதியில் மக்களின் கருத்தை ஏற்காமல், செயல்படும் அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கு மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

click me!