Seeman: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை காப்பாற்றியது சசிகலா தான்.. ஒரே போடு போட்ட சீமான்.!

By vinoth kumarFirst Published Dec 14, 2021, 12:23 PM IST
Highlights

காவல் நிலைய மரணம் குறித்த வழக்கில் ஆளுங்கட்சியான திமுக இரட்டை நிலைப்பாடு எடுக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்ட திமுக தற்போது மாணவர் மணிகண்டன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை அடக்குகிறது.

அதிமுக என்ற கட்சி இருக்கிறதா? இயங்குகிறதா? என்றே தெரியவில்லை. அதிமுக எதிர் கட்சிக்கான வேலையை செய்யவில்லை என சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்;- நகராட்சி, மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் எப்போதும் போல தனித்து களமிறங்க உள்ளோம். அதிமுக என்ற கட்சி இருக்கிறதா? இயங்குகிறதா? என்றே தெரியவில்லை. அதிமுக எதிர் கட்சிக்கான வேலையை செய்யவில்லை. ஆளுங்கட்சியை கேள்வி கேட்கின்ற தகுதி எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு இல்லை. ஏனென்றால் அதே தவறை தான் கடந்த முறையில் ஆட்சியில் இருக்கும் போது அதிமுக செய்தது.  நாங்கள் தற்போது எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு கேள்விகளை கேட்டு வருகிறோம். ஆனால், ஓபிஎஸ், இபிஎஸ் எந்த ஒரு கேள்வியையும் கேட்பதில்லை. ஊடகங்களை எந்த நேரத்திலும் நான் சந்திக்கிறேன். இவர்கள் இருவரும் ஊடகங்களை எங்காவது சந்திக்கிறார்களா என கேள்வி எழுப்பினார். 

காவல் நிலைய மரணம் குறித்த வழக்கில் ஆளுங்கட்சியான திமுக இரட்டை நிலைப்பாடு எடுக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்ட திமுக தற்போது மாணவர் மணிகண்டன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை அடக்குகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சா என திமுகவை சீமான் விமர்சனம் செய்துள்ளார். 

சசிகலா தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான் இது அவர்களது கட்சி பிரச்சனை. எனக்கு எப்போது சசிகலா மீது மதிப்பு, மரியாதை உண்டு. குடும்ப ரீதியான உறவு உண்டு. சசிகலா இல்லாமல் அதிமுகவை இந்த கொண்டு வந்திருக்க முடியாது என்பது என்னுடைய கருத்து.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சியை காப்பாற்றி தக்கவைத்தது சசிகலா தான். எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் அமர்வதற்கு சசிகலாவே காரணம். இது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும் என குறிப்பிட்டார். 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் காரணம். தேசபக்தி குறித்து பாடம் எடுக்கும் பா.ஜ.க உண்மையில் தேசத்திற்கு எதிரான கட்சியாகும். தேசத்தின் சொத்துக்களை கூறு போட்டு விற்று வருகிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

click me!