கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடியிடம் பேரம் பேசப்பட்டதா? கனகராஜ் சகோதரை காவலில் விசாரிக்க அனுமதி.!

By manimegalai aFirst Published Oct 28, 2021, 6:31 PM IST
Highlights

கனகராஜ் கொலையில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிவந்த அவரது சகோதரர் தனபால், வழக்கில் திடீர் திருப்பமாக கைது செய்யப்பட்டார்.

 

கனகராஜ் கொலையில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிவந்த அவரது சகோதரர் தனபால், வழக்கில் திடீர் திருப்பமாக கைது செய்யப்பட்டார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில், காவலரை கொலை செய்துவிட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொள்ளை முயற்சியில் தொடர்புடைய நபர்களும் அடுத்தடுத்து மர்மாமான முறையில் உயிரிழந்ததால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் ஆகியோர் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினர்.

அதிமுக ஆட்சி காலத்தில் சரியாக விசாரிக்கப்படாத இந்த வழக்கு, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் வேளையாக கொள்ளையில் தொடர்புடையவர்களை சிறையில் அடைப்பேன் என்று ஸ்டாலின் கூறிவந்தார். இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கோடநாடு வழக்கு தூசிதட்டப்பட்டது. நீதிமன்றங்களில் அனுமதி பெற்று வழக்கில் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் நேபாளம் வரை சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனிடையே, ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராக இருந்த கனகராஜ், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவராக கூறப்பட்டது. கொள்ளை முயற்சி நடைபெற்று இரண்டு நாட்களில் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். இது திட்டமிடப்பட்ட கொலை, இதில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் கனகராஜின் உறவினர்கள் கூறிவந்தனர்.

இந்தநிலையில் கோடநாடு வழக்கில் மேல் விசாரணை தொடங்கியதும் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிததால் தனிப்படை போலீஸார் சேலம் சென்று விசாரணை நடத்தினர். வழக்கில் திடீர் திருப்பமாக தனபால் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீஸார் அவர்களை நீதமன்றட்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் காவலில் கூடலூர் சிறையில் அடைத்தனர்.

கோடநாடு கொள்ளை குறித்து முன்னரே அறிந்திருந்த தனபால் அதனை போலீஸ் விசாரணையில் தெரிவிக்கவில்லை. மேலும், கனகராஜின் செல்போன் பதிவுகளையும் தன்பால் அழித்ததாகவும் குற்றஞ்சாட்ட்ப்பட்டது. இதுதொடர்பாக தன்பால் மற்றும் ரமேஷ் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் தனபாலிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நேற்று முன்தினம் தனிபடை போலிசார் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து தனபால் மட்டும் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபப்ட்டார். போலீஸாரின் கோரிக்கையை ஏற்ற நீதித்பதி சஞ்சை பாபா, தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

கோடநாடு கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம், கனகராஜ் சகோதரர் தனபால் பேரம் பேசியதாகவும், அவரை மிரட்டவே கனகராஜ் கொலையில் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. திட்டத்தை முறையாக செயல்படுத்த முடியாமல் தனபால் போலீஸில் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கோடநாடு கொலை, கொள்ளையில் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள தொடர்பு குறித்து தனபாலிடம், தனிப்படை போலீஸார் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே சசிகலா, ஓ.பி.எஸ். சிக்கலில் சிக்கி தவிக்கும் எடப்பாடிக்கு வழக்கு விசாரணை மேலும் நெருக்கடி கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டுள்ள தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு  ஜாமின் கோரி உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. இந்த ஜாமீன் மனுக்கள் நாளை விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!