BREAKING இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை.. கொடநாடு வழக்கில் அதிமுக மனு தள்ளுபடி..!

By vinoth kumarFirst Published Sep 7, 2021, 4:31 PM IST
Highlights

முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருப்பதால், மேல் விசாரணை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறியதை அனுபவ் ரவி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை கோரிய அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது. 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கின் சாட்சியான அனுபவ் ரவி மனுத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறைக்கு மேல் விசாரணை நடத்த அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்தது. 

Latest Videos

இந்நிலையில்,  உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அனுபவ் ரவி  மேல்முறையீடு செய்துள்ளார். அதில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தால் மேல் விசாரணை நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்புக்கும் எதிரானது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருப்பதால், மேல் விசாரணை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறியதை அனுபவ் ரவி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!