டாஸ்மாக் ஊழியர்கள் உற்சாகம்... அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட குதூகல அறிவிப்பு..!

Published : Sep 07, 2021, 03:55 PM IST
டாஸ்மாக் ஊழியர்கள் உற்சாகம்... அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட குதூகல அறிவிப்பு..!

சுருக்கம்

கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுவின் மூலம் வரும் வருவாய் கடந்த ஓராண்டில் மட்டும் 75% குறைந்துள்ளது. 

டாஸ்மாக் மதுபான ஊழியர்களுக்கு தலா ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 

மாத தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் 25,009 டாஸ்மாக் பணியாளர்களுக்கு ₹500 கூடுதலாக ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும் மேலும், ஆன்லைனில் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுவின் மூலம் வரும் வருவாய் கடந்த ஓராண்டில் மட்டும் 75% குறைந்துள்ளது. ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் எண்ணம் அரசிற்கு இல்லை.

கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களில் 1200 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிலுவையில் உள்ளது. தமிழகத்தை மின் மிகை மாநிலமாக உயர்த்த தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். தமிழகத்தில் சூரிய மின்சக்தி பூங்கா தொழில்நுட்பம், வர்த்தக ரீதிலான அடிப்படையில் நிறுவப்படும். 40,000 மெகாவாட் சூர்ய ஒளி மின் உற்பத்தி நிலையம், 20,000 மெகாவாட் சேமிப்பு திட்டத்துடன் நிறுவப்படும்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் 71,000 டன் நிலக்கரியை காணவில்லை என்றும் அனல்மின் நிலைய பதிவேட்டிற்கும் நிலக்கரி இருப்பிற்கும் வித்தியாசம் உள்ளது. ஏற்கனவே வடசென்னை அனல்மின் நிலையத்தில்   2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போனதாக புகார் உள்ளது’’ என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஆசிரியர் கண்ணன் மரணத்துக்கு திமுக அரசே காரணம்.. முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த பாஜக, தவெக!
விஜய் மீது அழுக்கு..? காவு கேட்கும் பாஜகவின் வாஷிங் மெஷின்..? கதிகலங்கும் தவெக..!