காம்பவுண்டை விட்டே வெளியே போங்க... அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் உத்தரவு..!

Published : Aug 18, 2021, 10:30 AM ISTUpdated : Aug 18, 2021, 10:34 AM IST
காம்பவுண்டை விட்டே வெளியே போங்க... அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் உத்தரவு..!

சுருக்கம்

பதாகைகளை கொண்டுவந்து அவையில் அதிமுகவினர் கூச்சல் எழுப்பியது திட்டமிட்ட செயல்; சட்டமன்ற வளாகத்தில் இருந்தே அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.  

நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் காவல்துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தை தற்போது மறுவிசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

 

கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் ஆட்சி கண்டிப்பாக நடக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

கோடநாடு வழக்கில் முதல்வரின் கேலிப்  பேச்சினை கண்டித்தும் கவண ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச அனுமதி அளிக்காததை கண்டித்தும் அதிமுக, பாமக, பாஜக உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து  வெளிநடப்பு செய்தனர். கொடநாடு விவகாரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அனுமதியின்றி பேரவையில் அதிமுகவினர் பிரச்சனையை எழுப்பக்கூடாது என சபாநாயகர் அபாவு தெரிவித்தார். 

பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பேச அனுமதி கொடுத்தேன்; ஆனால், அனுமதியில்லாமல் பதாகைகளை ஏந்தி வந்திருப்பது கண்டிக்கத்தக்கது என அப்பாவு தெரிவித்தார். 

பதாகைகளை கொண்டுவந்து அவையில் அதிமுகவினர் கூச்சல் எழுப்பியது திட்டமிட்ட செயல்; சட்டமன்ற வளாகத்தில் இருந்தே அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!