கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான தனிப்படை விசாரணைக்கு நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜராகவுள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான தனிப்படை விசாரணைக்கு நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜராகவுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களா உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. அப்போது, காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கனகராஜ், சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
undefined
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகரின் மேற்பார்வையின் கீழ் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 267 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது.
இதனிடையே அதிமுக நிர்வாகிகள் சிலருக்கும் தனிப்படை போலீசார் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராகிறேன்.
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj)
இதுதொடர்பாக நமது அம்மா நாளேட்டின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராகிறேன் என கூறியுள்ளார்.