கடவுளை இழிவு படுத்துவது சரி! மனிதனை பற்றி பேசுவது தவறா? இந்து விரோத காவல் துறையின் பதிலென்ன! கொதிக்கும் H.ராஜா

By vinoth kumarFirst Published Aug 6, 2022, 10:24 AM IST
Highlights

நூறு ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு லிட்டர் தயிரை 5 சதவீத வரி உயர்வு செய்ததால் 105 ரூபாய்க்கு தானே விற்க வேண்டும்? ஆனால் தமிழக அரசு ஏன் 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது? என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

நூறு ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு லிட்டர் தயிரை 5 சதவீத வரி உயர்வு செய்ததால் 105 ரூபாய்க்கு தானே விற்க வேண்டும்? ஆனால் தமிழக அரசு ஏன் 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது? என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சினிமாவில் பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன். இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி கூட்டங்களில் பங்கேற்று வரும் நிலையில், கடந்த 30ம் தேதி மதுரவாயல் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன்;- ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே இருக்கக்கூடிய பெரியார் சிலை குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இதுதொடர்பாக திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம்  ஆகியோர் தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 3ம் தேதி சென்னை சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சிவபெருமானை இழிவுபடுத்திய யூ டியூபர் மைனர் விஜய்யை கைது செய்ய துணிச்சலற்ற காவல் துறை  கனல் கண்ணனை கைது செய்யலாமா? கடவுளை இழிவு படுத்தலாம் என்றால் மனிதனை பற்றி பேசியது தவறா? இதற்கு தமிழக இந்து விரோத காவல் (ஏவல்) துறையின் பதிலென்ன. ஈ.வெ.ரா விநாயகர் சிலைகளை உடைத்த போது யாரும் அவரை கைது செய்யவில்லை. எனவே இன்று கனல் கண்ணனை கைது செய்ய எவ்வித ஞாயமும் இல்லை என  எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா;- நூறு ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு லிட்டர் தயிரை 5 சதவீத வரி உயர்வு செய்ததால் 105 ரூபாய்க்கு தானே விற்க வேண்டும்? ஆனால் தமிழக அரசு ஏன் 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது? அந்த 15 ரூபாய் ஸ்டாலினுக்கு போகிறதா? அல்லது அவரது மருமகன் சபரீசனுக்கு போகிறதா? இல்லை, சின்னவர் உதயநிதி ஸ்டாலினுக்கு போகிறதா?' யாரை ஏமாற்றுகிறது தமிழக அரசு. வரி உயர்வு செய்தால் 105 ரூபாய்க்கு தானே இருக்க வேண்டும் . 15 ரூபாய் மக்கள் பணத்தை சுரண்டுகிறது ஸ்டாலின் அரசு. இது தமிழகத்தில் நடக்கும் கொள்ளை என்று எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

click me!