கோட்டையை நோக்கி வரேன்னு தெரிஞ்சிகிட்டு முதல்வர் டெல்டாவுக்கு பேயிட்டாரு.. அடங்க மறுக்கும் அண்ணாமலை.

Published : May 31, 2022, 03:56 PM IST
கோட்டையை நோக்கி வரேன்னு தெரிஞ்சிகிட்டு முதல்வர் டெல்டாவுக்கு பேயிட்டாரு.. அடங்க மறுக்கும் அண்ணாமலை.

சுருக்கம்

கோட்டையை நோக்கி வரப் போகிறோம் என்று தெரிந்ததும் முதல்வர் ஸ்டாலின் டெல்டா பகுதிக்கு சென்று விட்டார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

கோட்டையை நோக்கி வரப் போகிறோம் என்று தெரிந்ததும் முதல்வர் ஸ்டாலின் டெல்டா பகுதிக்கு சென்று விட்டார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால் அவர் எங்கு சென்றாலும் விடமாட்டோம் என்றோம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தது முதல் தொடர்ந்து  பாஜக தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஊழலில் ஈடுபடுவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பாஜகவுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தவே காவல் துறை அனுமதி வழங்கியது. இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த அரசு திராவிடர் மாடல் சினிமா அரசு, வாக்குறுதிகளை கொடுத்து விட்டு இன்னும் நிறைவேற்றவில்லை, மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைத்தும் ஏன் தமிழக அரசு குறைக்கவில்லை, இது குறித்து கேட்டதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி திமுக தேர்தல் அறிக்கையை தயாரித்தது திமுக பொருளாளர் டி.ஆர் பாலுதான் என கூறுகிறார். முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டால் டி.ஆர் பாலுவிடம் கேளுங்கள் என்கிறார். எதற்கெடுத்தாலும் டிஆர் பாலுவை கேளுங்கள் என்றால் டிஆர் பாலுவை முதல்வர் ஆக்கங்கள். திமுகவையும் ஸ்டாலினுக்கும் முதல் எதிரி ஆர்.எஸ் பாரதிதான். தனக்கு எம்பி பதவி கிடைக்கவில்லை என்பதற்காக ஆர்.எஸ் பாரதி இப்படி ஏடாகூடமாக பேசிவருகிறார்.

கடந்த 3 நாட்களுக்கும் மேலாக திமுக அமைச்சர்கள் மாவட்டந் தோறும் சென்று இளவரசர் உதயநிதியை அமைச்சராக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இன்று பாஜகவினர் கோட்டையை நோக்கி வருகிறோம் என்று தெரிந்து முதல்வர் ஸ்டாலின் டெல்டாவுக்கு சென்றுவிட்டார். அவர் எங்கு சென்றாலும் நாங்கள் விடமாட்டோம், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்ய அவர் மறுப்பது ஏன்? தமிழகத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் கஞ்சா கிடைக்கிறது, கஞ்சாவின் தலைநகராக சென்னை மாறி வருகிறது, இன்னும் இரண்டு நாட்களில் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப் போகிறோம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கச்சத்தீவை மீட்பார். கச்சத்தீவை மீட்க சொல்வதற்கு திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!