20 ஆண்டுகளாக அதிமுகவின் தீவிர விசுவாசி.. திடீரென திமுகவில் இணைந்தார்.. என்ன காரணம் தெரியுமா? அவரே சொன்ன பதில்

By vinoth kumarFirst Published May 31, 2022, 3:39 PM IST
Highlights

அதிமுகவில் எந்த ஒரு விழா நடந்தாலும் முதல் ஆளாக விழா மேடைக்கு வெளியே நிற்பது மீசை சௌந்தரராஜன் தான். பூசணிக்காய் உடைப்பது தொடங்கி தேங்காய் உடைப்பது வரை பல விஷயங்களில் கம்பீர மீசையை முறுக்கிக்கொண்டு இவர் காட்சி அளிப்பார். அதிமுக கூட்டங்கள் நடக்கும் போதெல்லாம் ஜெயலலிதா காலத்தில் அம்மா வாழ்க கோஷம் போட்டவர். 

20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உறுப்பினராக இருந்து வந்த மீசை சௌந்தரராஜன் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவில் எந்த ஒரு விழா நடந்தாலும் முதல் ஆளாக விழா மேடைக்கு வெளியே நிற்பது மீசை சௌந்தரராஜன் தான். பூசணிக்காய் உடைப்பது தொடங்கி தேங்காய் உடைப்பது வரை பல விஷயங்களில் கம்பீர மீசையை முறுக்கிக்கொண்டு இவர் காட்சி அளிப்பார். அதிமுக கூட்டங்கள் நடக்கும் போதெல்லாம் ஜெயலலிதா காலத்தில் அம்மா வாழ்க கோஷம் போட்டவர். 

குறிப்பாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது தினமும்  வெளியே நின்று கொண்டு அம்மா, அம்மா என்று கண்ணீர்விட்டு, தேங்காய் உடைத்ததை வழக்கமாக வைத்து இருந்தார். ஜெயயலிதா மறைந்த போது கண்ணீர் விட்டு கதறினார். அப்படிப்பட்ட தீவிர தொண்டரான செளந்திரராஜன் இப்போது திமுகவில் உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் முகம் கொண்ட மோதிரத்துடன் செளந்தரராஜன் இருப்பது போன்ற புகைப்படம் நேற்று முதல் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திமுகவில் இணைந்ததற்கான காரணம் குறித்து செளந்திரராஜனிடம் கேட்டதற்கு, அதிமுகவில் அடிமட்ட தொண்டர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இல்லை எனவும், 20 ஆண்டு காலம் அதிமுகவுக்கு தீவிரமாக உழைத்தும் பலனில்லை என கூறினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்ததாகவும், இனி சாகும் வரை திமுகவுக்காக உழைப்பேன் என கூறினார். 

அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கேட்டதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் எதிர்கட்சியாக இருந்தாலும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் இப்போது உள்ள சூழலில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி என நான்கு முனை பிரச்சனை உள்ளது. இவர்களில் யார் வளர்ந்தாலும் மற்ற மூவருக்கும் பிடிக்காது அதனால் அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை என செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

click me!