அறிவாலயம் வரும் அமமுக முக்கிய புள்ளிகள்... அவசர அவசரமாக வந்த நன்னியூர் ராஜேந்திரன் கே.என்.நேரு!!

Published : Dec 13, 2018, 11:35 AM ISTUpdated : Dec 13, 2018, 11:37 AM IST
அறிவாலயம் வரும் அமமுக முக்கிய புள்ளிகள்... அவசர அவசரமாக  வந்த நன்னியூர் ராஜேந்திரன் கே.என்.நேரு!!

சுருக்கம்

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் செந்தில் பாலாஜியுடன் முக்கிய நிர்வாகிகளுடன் திமுகவில் இணையவுள்ளார்.

கரூரைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளரும், முன்னாள் அதிமுக அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி நாளை காலை 10.45 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வந்தது. இதனால் திமுக அறிவாலயத்தில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நாளை திமுகவில் இணைய செந்தில் பாலாஜியும் அவசர அவசரமாக சென்னை வந்தனர்.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில்  பங்கேற்க இன்று மாலையே மும்பை கிளம்பிவிட்டார் ஸ்டாலின்.  திருமண நிகழ்ச்சி முடிந்து நாளை மதியம் 12.30 மணிக்குத்தான் சென்னை திரும்புகிறார். விமான நிலையத்திலிருந்து நாளை மதியம் நேரடியாக  அறிவாலயம் வரும் ஸ்டாலின் மதியம் ஒரு மணி அளவில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என சென்னையில் தங்கியிருக்கும் செந்தில் பாலாஜிக்கு  தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.   

இந்நிலையில் இன்று மதியம் செந்தில்பாலாஜி திமுகவில் இணைய உள்ள நிலையில், தற்போது அண்ணா அறிவாலயத்திற்கு கரூர் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் திருச்சி மாவட்ட செயலாளர் நேரு உள்ளிட்டோர் அறிவாலயம்  வந்துள்ளனர். செந்தில் பாலாஜி திமுகவில் இனைய முக்கிய காரணமாக இருந்த  திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவையும் கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனையும் உடன் இருக்கும்படி ஸ்டாலின் சொன்னதால்  இருவரும்  அறிவாலயத்துக்கு வந்திருக்கிறார்கள்.  மேலும் செந்தில் பாலாஜியுடன் சில முக்கிய புள்ளிகளும் அறிவாலயம்  வருவதால் அவர்களை வரவேற்க முன்கூட்டிய வந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!