வா தலைவா வா..! ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் கிஷோர் கே சுவாமி

By karthikeyan VFirst Published Nov 6, 2020, 9:08 PM IST
Highlights

ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என நம்புவதாகவும் வர வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் கிஷோர் கே சுவாமி வெளிப்படுத்தியுள்ளார்.
 

ரஜினிகாந்த் 2017 டிசம்பர் 12ம் தேதி அவரது பிறந்தநாளன்று, அரசியலுக்கு வருவது உறுதி என்று வாக்குறுதி அளித்தார். அதுமுதல் அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் அவர் எப்போது அரசியலில் இறங்குவார், கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், அவர் தொடர்ச்சியாக படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்திவந்தார்.

2019 மக்களவை தேர்தலுக்கு முன், நமது இலக்கு, 2021 சட்டமன்ற தேர்தல் தான் என்றார். சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியதையடுத்து, தீவிர அரசியலில் இறங்க ரஜினிகாந்த் தயாராகிவிட்டதாகவே அவரது ரசிகர்கள் நினைத்தனர். 

ஆனால் அரசியலை பற்றி எதுவுமே கண்டுகொள்ளாமல் ரஜினிகாந்த் இருந்த நிலையில், இதற்கிடையே கொரோனாவால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு நிலைமை மொத்தமாக மாறியதால் ரஜினிகாந்த் மௌனம் சாதித்துவந்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ரஜினிகாந்த் அரசியலை பற்றி வாய் திறக்காத நிலையில், தனது உடல்நிலை சரியில்லை என்பதை சுட்டிக்காட்டி ரஜினி வெளியிட்ட அறிக்கை, அவர் அரசியலுக்கு வரும் தனது முடிவிலிருந்து பின்வாங்குகிறார் என்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.

இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசிய கிஷோர் கே சுவாமி, தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்ற மக்களின் கருத்தை நீங்கள்(ரஜினிகாந்த்) பிரதிபலித்தபோது, நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வருவீர்கள் என்று நம்பி, உங்களது அரசியல் வருகைக்கு ஆதரவளித்தவர்களில் நானும் ஒருவன்.

உங்களது அரசியல் வருகைக்கான செயல்பாடுகள் அனைத்தும் தெளிவாக உள்ளன. உங்கள் உடல்நிலை குறித்த யோசனை நியாயமானதுதான் என்றாலும், சமூக வலைதளங்களும் தொலைத்தொடர்பு சாதனங்களும் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் பிரசாரங்களை அவற்றிலேயே மேற்கொண்டுவிடலாம். எனவே மக்கள் நலன் கருதி நீங்கள் நல்ல முடிவு எடுப்பீர்கள் எனவும் உங்கள் அரசியல் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவேன் எனவும் நம்புகிறேன் என்று கிஷோர் கே சுவாமி தெரிவித்துள்ளார்.
 

click me!