பிஞ்ச செருப்பும் & புறம்போக்கும்… கிஷோர் கே.சாமியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

By Raghupati RFirst Published Dec 28, 2021, 9:08 AM IST
Highlights

சிறையில் இருந்து தற்போது வெளியே வந்த பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமியை வச்சு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

தமிழகத்தில் திராவிட கொள்கையே இன்றளவும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய கொள்கைகள் பேசும் அளவுக்கு வலது சாரி சிந்தனைகள் தமிழகத்தில் அதிகம் பொதுமக்களால் பேசப்படுவதில்லை. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இந்த கொள்கை ஓரளவுக்கு பேசப்பட்டாலும், தமிழகத்தில் வலது சாரி சிந்தனைகளும் சரி, அது சார்ந்த ஆட்களும் கவனத்தில் கொள்வதில்லை. கிஷோர் கே.சாமி, மாரிதாஸ்,அர்ஜுன் சம்பத் போன்றோர் வலது சாரிய சிந்தனைகளை பேசி, அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ஜூன் 10-ம் தேதி புகார் அளித்தார். 

அதனடிப்படையில் 153 - கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) ( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இதனையடுத்து கிஷோர் கே. சாமியை ஜூன் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில்வைக்க, தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து அவர் சைதாப்பேட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். 

அதேபோல திமுக அரசை தொடர்ந்து விமர்சிக்கும் மாரிதாஸையும் கைது செய்யப்பட்டார். குன்னூர் அருகே ஹெலிகாப்டரில் சென்ற முப்படை தலைமை தளபதி பிவின் ராவத் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக, தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிறுவனம் அனுப்பியது போல் போலி மின்அஞ்சல் அனுப்பியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

தொடர்ந்து நெல்லை மேலபாளையத்தை சேர்ந்த முகமது காதர் மீரான் என்பவர், இந்தியாவில் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸை பரப்புவதாகவும், முஸ்லீம் மக்களிடையே வெறுப்பை தூண்டும்வித்த்தில் கருத்துக்களை வெளியிடும் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். மரிதாஸ் மீதான வழக்குகள் ரத்து இனையடுத்து மேலபாளையம் போலீசார் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாரிதாஸ் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளில் இரு வழக்குகளில் அடுத்தடுத்து இரண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், போலி ஈமெயில் விவகாரத்தில் மாரிதாசுக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார் மாரிதாஸ்.

மாரிதாஸை போலவே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் விபத்து குறித்து சமூக வலைதளத்தில் தமிழக அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக பதிவிட்ட புதுக்கடை பகுதியை சேர்ந்த 24 வயது பாஜக அனுதாபி வாலிபரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இவர்கள் மூவரும் கடந்த வாரம் ஒரே நாளில் சிறையில் இருந்து விடுவித்தனர். 

இந்த மூன்று பேரும், வெவ்வேறு காலை இடைவெளியில் கைது செய்யப்பட்டிருந்தாலும், வலதுசாரி சிந்தனை கொண்ட மற்றும் பாஜக ஆதரவாளர்களான மாரிதாஸ், கிஷோர் கே சாமி மற்றும் சிபின் ஆகியோர் ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ட்விட்டரில் பாஜக எச்.ராஜா கருத்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ‘‘திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பெரிய ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டேன். யூட்யூபர் மாரிதாஸ், திமுக எதிர்ப்பாளர் கிஷோர் கே ஸ்வாமி, முகநூல் பதிவாளர் பிபின்குமார் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் இருந்து பிணை வழங்கப்பட்டிருப்பதை கொண்டாடும் விதமாக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் வழிபாடு செய்தேன்’ என்று கூறினார்.இதனை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். 

கிஷோர் கே.சாமியும் சரி, மாரிதாஸும் சரி சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ட்விட்டரில் நன்றியை தெரிவித்தார்கள். ‘ஜெயில் கம்பிகள் வழியே வெளியே வரக்கூடிய நிலையில் உள்ள என் மீது குண்டாஸ் போட்டு அழகு பார்த்த , கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத திராணியற்ற முதுகெலும்பில்லாத மு க ஸ்டாலின் தலைமையிலான கோமாளிகள் தர்பாருக்கு வணக்கமுங்க’  என்று கிஷோர் கே.சாமியும், இப்போது தான் நடந்தவை அனைத்தையும் முழுமையாகப் படித்து கேட்டு அறிந்தேன்.

ஆஆஆஆக திமுகவிற்கு நன்றி என்று மாரிதாஸும் பதிவிட்டனர். இந்நிலையில் கிஷோர்.கே.சாமியை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பிஞ்ச செருப்பும், புறம்போக்கும் என்று கூறி கலாய்த்து தள்ளி வருகின்றனர் நெட்டிசன்கள். 

click me!