கிரண்பேடியிடம் மாட்டிக்கொண்ட நாராயணசாமி..! வெளிச்சம் போட்டு காட்டிய முக்கிய ஆதாரம்..!

 
Published : Jul 06, 2018, 08:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
கிரண்பேடியிடம் மாட்டிக்கொண்ட நாராயணசாமி..! வெளிச்சம் போட்டு காட்டிய முக்கிய ஆதாரம்..!

சுருக்கம்

kirenbedi posted a new video against narayanasamy

கிரண்பேடியிடம் மாட்டிக்கொண்ட நாராயணசாமி..! வெளிச்சம் போட்டு காட்டிய முக்கிய ஆதாராம்..!

புதுவை துணை நிலை ஆளுனர் கிரண்பேடி ஒரு பதிவை ஆதாரத்துடன் வெளியிட்டு  முதல்வர் நாராயணசாமியை பேச விடாமல் லாக் செய்து உள்ளார்

அதாவது, ‘டெல்லி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட வேண்டும்’’ என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்து இருப்பது டெல்லிக்கு பொருந்துதோ இல்லையோ பாண்டிச்சேரிக்கு நல்லாவே பொருந்துகிறது என்று கூறலாம்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பதவி வகிக்கிறார். இவர் தலைமையிலான அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நிறுத்தி வைத்தார்.அதுமட்டுமில்லாம் முக்கிய அதிகாரிகாளின் நியமனத்தையும் நியமனங்களையும் ரத்து செய்தார்.

இதன் காரணமாக  ஆளுநருக்கும் முதல்வருக்கும் பனிப்போர் மூண்டது.பின்னர் இது குறித்து  தொடரப்பட்ட வழக்கில் இது போன்ற தீர்ப்பு வெளியானது

இந்நிலையில் புதுவை துணை நிலை ஆளுனர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் எப்போதும் எதிரும் புதிருமாக தான் சைலன்டான சண்டை நடந்துக் கொண்டே இருக்கும்.

கிரண் பேடி மத்தியில் ஆளும் பாஜக விற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அவர் கொண்டு வரும் எந்த திட்டத்திற்கும்,முக்கிய முடிவுக்கும் செவி சாய்க்க மாட்டார் நாராயணசாமி.

அதே போன்று  நாராயணசாமி எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு ஒரு தடை போடுவார்  கிரண்பேடி..

மேலும் அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் செய்தி அனுப்பி மிக விரைவில் எந்த வேலையையும் செய்ய  வேண்டும் எனவும், தகவல் பரிமாற்றத்தை விரிவுப்படுத்துவார் கிரண்பேடி...

ஆனால் நாராயணசாமியோ இதெல்லாம் சட்டத்தில் இல்லை...வாட்ஸ் ஆப் அரசு அங்கீகாரம் பெற்ற செயலி அல்ல என கருத்து தெரிவித்தே இவரிடம் பேசுவார் ...

இந்நிலையில் ஆளுநர் குறித்த முக்கிய தீர்ப்பு வெளியானதால், நாராயணசாமி  ஒரே குஷி ஆகிவிட்டார்...டெல்லி தீர்ப்பில் வெளியானது போல், ஆளுநர் என்றால் மாநில அரசுடன்  கலந்து ஆலோசித்து விட்டு தான் எந்த முடிவையும் எடுக்க முடியும் என்ற கருத்தை  வரவேற்பதாக நாராயணசாமி தெரிவித்தார் ...இது புதுவைக்கும் பொருந்தும் என  குறிப்பிட்டார்.

இந்நிலையில், தமிழே தெரியாத கிரண்பேடி அவர்கள், பிரபல தனியார் தமிழ் செய்தித்தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நாராயணசாமி கொடுத்த பேட்டியை ஆதாரத்துடன் வெளியிட்டு உள்ளார் கிரண் பேடி

அந்த  பேட்டியில், புதுவை மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் தான் நிர்வாக அதிகாரி என  தெரிவித்து உள்ளார்...அன்று நாராயணசாமி பேசிய இந்த வீடியோ பதிவு தான் தற்போதைக்கு செம டாக்.... காரணம் இந்த வீடியோ பதிவை பதிவிட்டு, இந்த வீடியோ தமிழில் இருப்பதால்  மற்றவர்களுக்கும் மொழிப்பெயர்ப்பு செய்து புரிய வையுங்கள் என பதிவிட்டு உள்ளார்.

முற்பகல் செய்யும்  செயல், பிற்பகல் தனக்கு தானே வரும் என்பதற்கு ஏற்ப அன்று அவர் பேசிய அதே கருத்து இன்று அவருக்கே கசப்பாக அமைந்துவிட்டது.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!