கேரளாவில் கேவலமாக மண்ணை கவ்விய பாஜக.. 5 மாநகராட்சிகளை கைப்பற்றி மாஸ் காட்டி இடதுசாரிகள்..!

By vinoth kumarFirst Published Dec 17, 2020, 11:24 AM IST
Highlights

கேரளாவில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி உள்ளிட்ட 5 மாநகராட்சிகளை  ஆளும் இடதுசாரிகள் கட்சி கைப்பற்றியுள்ளது.

கேரளாவில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி உள்ளிட்ட 5 மாநகராட்சிகளை  ஆளும் இடதுசாரிகள் கட்சி கைப்பற்றியுள்ளது.

கேரளாவில்  உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 3 கட்டமாக கடந்த வாரம் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் மதியத்துக்கு மேல் வெளியாக தொடங்கியது. தொடக்கம் முதலே  இடதுசாரிகளுக்கு, காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. 

இந்நிலையில், கேரளாவில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கோழிக்கோடு ஆகியவற்றை இடது முன்னணியும், கண்ணூர் மாநகராட்சியை காங்கிரஸ் கூட்டணியும் வென்றுள்ளன. மொத்தமுள்ள 86 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களிலும், இடது முன்னணி 35 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். 

14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 11 இடங்களில் இடது முன்னணியும் 3 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றன. 152 ஊராட்சி ஒன்றியங்களில் 108 இடங்களில் இடது முன்னணியும், 44 இடங்களில் காங்கிரசும் வென்றன. பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 941 கிராம பஞ்சாயத்துகளில் 514 இடங்களை இடது முன்னணியும், 376 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும், 23 இடங்களை பாஜகவும், 28 இடங்களை பிற கட்சியினரும் பிடித்துள்ளனர்.

click me!