கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது.. தலையில் குண்டு தூக்கி போட்ட முதல்வர்.. அரண்டு போன மக்கள்..!

By vinoth kumarFirst Published Jul 17, 2020, 7:45 PM IST
Highlights

கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவில் முதன் முதலில் கொரோனா தொற்று பதிவான கேரளாவில், சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன்;- கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பூந்துரா, புல்லுவிலா கடலோர பகுதிகளில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது. கேரளாவில் இன்று அதிகபட்சமாக மேலும் 791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேரளவில் 11,066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில்,  4,993 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. 

click me!