சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார்... கொளுத்தி போட்ட கார்த்தி சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Jul 17, 2020, 7:14 PM IST
Highlights

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவிற்கு அவரே தலைமை ஏற்பார் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவிற்கு அவரே தலைமை ஏற்பார் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சசிகலா விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறார்' என்று உலாவிக் கொண்டிருக்கும் தகவல். அ.தி.மு.க நிர்வாகத்தில் பலரின் உறக்கத்தைக் கெடுத்திருக்கிறது. சசிகலா வருகையை எதிர்பார்த்தும் அதிமுகவில் ஓர் கூட்டம் காத்திருக்கிறது. அதேநேரம், 'சசிகலா இப்போதைக்கு ரிலீஸாக வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக அடித்துச் சொல்கிறார்கள் சில அமைச்சர்கள். ஆனால், மூத்த அமைச்சர்களோ மௌனம் காத்து வருவது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஆம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திக் சிதம்பரம்;- கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை பூசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாருடைய கொள்கைகள் அவருடைய முற்போக்கு சிந்தனைகளை எதிர்ப்பவர்கள் தான் கீழ்தரமான செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். முருகனை அவ மரியாதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் வழங்கும் முருகனை கொச்சைப்படுத்துவது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். 

மேலும், பேசிய அவர் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார். கட்சியின் கட்டுப்பாட்டை அவர் கையில் எடுத்து கொள்வார். தினகரன் மீண்டும் கட்சிக்கு வருவார். அவர்களுடைய குடும்பத்துக்கு கட்சி சென்றுவிடும் என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!