முன்னாள் கேரளமுதல்வர்: 11முறை அசைக்கமுடியாத எம்எல்ஏ.. அரசியல் பொன் விழா நாயகனுக்கு பாஜக உட்பட பாராட்டுவிழா.!

By T BalamurukanFirst Published Sep 19, 2020, 10:10 AM IST
Highlights

11முறை தொடர்ந்து ஒரே தொகுதியில் எம்எல்ஏ,3முறை அமைச்சர், 1முறை எதிர்க்கட்சித்தலைவர், 2முறை முதலமைச்சர் என அரசியல் பயணத்தில்  50 ஆண்டுகள் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறார்  முன்னாள் கேரள முதல்வர் உம்மன்சாண்டி.பொன்விழா கண்ட நாயகனுக்கு கோட்டயத்தில் பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் பிரமாண்ட விழா நடத்தி மகிழ்ந்திருக்கிறார்கள்.
 


11முறை தொடர்ந்து ஒரே தொகுதியில் எம்எல்ஏ,3முறை அமைச்சர், 1முறை எதிர்க்கட்சித்தலைவர், 2முறை முதலமைச்சர் என அரசியல் பயணத்தில் 50 ஆண்டுகள் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறார் முன்னாள் கேரள முதல்வர் உம்மன்சாண்டி.பொன்விழா கண்ட நாயகனுக்கு கோட்டயத்தில் பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் பிரமாண்ட விழா நடத்தி மகிழ்ந்திருக்கிறார்கள்.

மாணவர் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்ட உம்மன்சாண்டி படிப்படியாக தன்னுடைய திறமைகளை காட்டியதால் இந்திராகாந்தியின் மனதில் இடம் பிடித்தார்.அதன்பிறகு அவருக்கு சுக்கிரதிசை தான். முதன் முறையாக 1970ம் ஆண்டு புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.அன்று முதல் இன்று வரை அசைக்க முடியாத.. எத்தனை எதிர்க்கட்சிகள் குட்டிகரணம் அடித்தும் வெற்றி பெறமுடியாமல் தோல்வியை மட்டுமே கண்டிருக்கிறார்கள்.அந்த அளவிற்கு தொகுதி மக்களின் மனதில் கட்சி பேதமின்றி இடம் பிடித்திருக்கிறார் உம்மன்சாண்டி.

தன் தொகுதிக்குள் இருக்கும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கும் அளவிற்கு மக்களோடு மக்களாக பழகி வருபவர் தான் உம்மன்சாண்டி. இவரது எளிமை தமிழகத்தில் காமராஜர் கக்கன் போன்றோரைப் போன்றது. முதல்வராக இருந்தாலும் பொதுமக்கள் எளிதாக அணுகவும் பார்க்கவும் முடியும். கேரளா மாநிலத்தின் முதல்வராக அமர்ந்த போது எந்த முதல்வரும் செய்யாத ஒன்றை செய்தார்.அதான் ஒவ்வொரு திங்கள் கிழமையும் பொதுமக்கள் தொகுதி குறித்த குறைகளை முதல்வரிடமே சொல்லலாம் என்று..


தனக்கு பாதுகாப்பு வாகனம் ஒன்று இருந்தால் போதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.தான் முதல்வர் என்பதற்காக என்னுடைய வாகனம் வரும் போது சிக்னல் சரிசெய்வது ட்ராபிக் இடையூறு செய்து பொதுமக்களை காக்க வைக்க கூடாது. சிக்னலில் என்வாகனமும் நின்று தான் போக வேண்டும் என்று கட்டளையிட்டவர். அதன் படி முதல்வர் வாகனம்  சிக்னலில் நின்று தான் சென்றது.

தன் தொகுதியான புதுப்பள்ளிக்கு செல்லும் உம்மன்சாண்டி.இரவு நேரத்தில் ரயில் பயணம் செய்து தொகுதிக்கு செல்கிறார். தொகுதியில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பிறகு மீண்டும் இரவு ரயில் ஏறி முதல்வர் பணிக்கு திரும்பிய காலத்தை நினைவுபடுத்தி கட்சி தொண்டர்கள் பேசியினார்கள்.  பஸ் ஆட்டோக்களில் பயணம் செய்வது முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிக்கு புதிதல்ல.


கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றாலும் அங்கு மக்களோடு மக்களாக உட்கார்ந்தும்... சிலநேரங்களில் கூட்டம் அதிகம் இருந்தால் வாசலில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு வருவார்.ஏகே. ஆண்டனி கேரள முதல்வராக இருந்தபோது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு 2004ம் ஆண்டு அந்த பதவியில் உம்மன் சாண்டியை உட்கார காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிபட்ட கதாநாயகனுக்கு கேரள மாணவர் அமைப்பினர் கோட்டயத்தில் விழா எடுத்தனர். அதில் 'அரசியலில் 50ஆண்டு காலம் பயணம் உம்மன்சாண்டிக்கு பாராட்டு விழா நடத்தினர். அந்த விழாவில் பாஜக உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உம்மன்சாண்டியை வாழ்த்தி பேசினர்.

click me!