குஜராத்தை தட்டித் தூக்க ஸ்கெட்ச் போட்ட ஆம் ஆத்மி.. பாஜக ஆணவத்தை முறியடிக்க வாய்ப்பு கேட்கும் கெஜ்ரிவால்!

Published : May 01, 2022, 09:53 PM IST
குஜராத்தை தட்டித் தூக்க ஸ்கெட்ச் போட்ட  ஆம் ஆத்மி..  பாஜக ஆணவத்தை முறியடிக்க வாய்ப்பு கேட்கும் கெஜ்ரிவால்!

சுருக்கம்

குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்று நான் கேள்விப்படுகிறேன். டிசம்பர் வரை எங்களுக்கு நேரம் கொடுக்க பாஜக விரும்பவில்லை. அப்படியானால் ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பாஜக பயப்படுகிறதா? 

குஜராத்தில் பாஜகவின் ஆணவத்தை முறியடிக்க எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

அண்மையில் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் தங்கள் பார்வையை ஆம் ஆத்மி கட்சி  திருப்பியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் புருச் நகரில் நடைபெற்ற ஆதிவாசி சங்கல்ப் மகா சம்மேளம் நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “குஜராத் மாநிலம் குறித்து ஆம் ஆத்மி கட்சி கவலைப்படவில்லை என்று சிலர் பேசுகிறார்கள். குஜராத்தில் உள்ள 6.5 கோடி மக்களுக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். 

குஜராத்தில் பாஜகவின் ஆணவத்தை முறியடிக்க எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், எங்களுடைய ஆட்சி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அடுத்த முறை எங்களை தூக்கி எறிந்திவிடுங்கள். குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்று நான் கேள்விப்படுகிறேன். டிசம்பர் வரை எங்களுக்கு நேரம் கொடுக்க பாஜக விரும்பவில்லை. அப்படியானால் ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பாஜக பயப்படுகிறதா? ஆனால்,  கடவுள் நம்முடன் இருக்கிறார், இப்போதே தேர்தல் நடத்தினாலும் சரி அல்லது 6 மாதங்கள் கழித்து நடத்தினாலும் சரி  ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும். 6.5 கோடி மக்கள் உள்ள குஜராத்தில் பாஜக மாநிலத் தலைவராக ஒரு குஜராத்தி கிடைக்கவில்லையா? இது குஜராத் மக்களை அவமதிக்கும் செயல். மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் குஜராத்தில் ஆட்சியை நடத்துவாரா?

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அது முடிந்துவிட்டது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியில் நல்லவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் குஜராத்திற்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பினால், எங்களுடன் சேருங்கள். அப்படி இல்லையெனில் எதுவும் நடக்காது" என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். பஞ்சாப்பில் இதே பாணியில்தான் ஆம் ஆத்மி பிரசாரத்தை செய்தது. குஜராத்தில் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இப்போதே பிரசாரத்தைத் தொடங்கி விட்டதாகப் பார்க்கப்படுகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி