பயந்து ஓட மாட்டேன்... எடப்பாடியை எச்சரிக்கும் கேசி பழனிச்சாமி...!! சிறை வாசலில் அதிரடி பேட்டி...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 13, 2020, 11:57 AM IST
Highlights

கட்சியின்  தலைமையை நியமிக்கும் உரிமை தொண்டர்களுக்கு உள்ளது அந்த உரிமையை பறித்தது தவறு என்றுதான் சொல்கிறேன் .  இவர்கள் சிறை வைத்தது என்னை அல்ல புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும்  அம்மாவின் கொள்கைகளைத்தான். 
 

எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் பயந்து ஓட மாட்டேன் எப்போதும் நான் அதிமுககாரன் தான் என கே சி பழனிச்சாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.  சிறையிலிருந்து வெளியில் வந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார் . அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துகிறார் ,  போலி இணையதளம் நடத்துகிறார் என , கேசி பழனிச்சாமி மீது முத்துக் கவுண்டன் புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் தங்கவேல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில்,   கடந்த ஜனவரி 28 ஆம் தேதி சூலூர் போலீசார் கைது செய்தனர் .  இந்நிலையில்  அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது . கோவை மத்திய சிறையில் இருந்து வெளியில் வந்த அவர் , செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்,  அதில் , 

ஜாமீன் உத்தரவு தேற்று முன்தினம் வந்தும் என்னை சிறையில் இருந்து விடுவிக்கவில்லை .  அதிமுகவுக்காவுக்கு உரிமை கோருவதால் என் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது .  அதிமுக பொதுச் செயலாளர் நியமனம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.  பொதுச்செயலாரோ, ஒருங்கிணைப்பாளரோ,  எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்,   ஆனால் அவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை அடிப்படை உறுப்பினர்களுக்கு உள்ளது அந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது என நீதபதி கூறியுள்ளார், அதைத்தான் நான் என் இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டேன் அதில் என்ன தவறு இருக்கிறது.   நீதிமன்ற உத்தரவை செய்தியாக வெளியிடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது .   கட்சியின்  தலைமையை நியமிக்கும் உரிமை தொண்டர்களுக்கு உள்ளது அந்த உரிமையை பறித்தது தவறு என்றுதான் சொல்கிறேன் .  இவர்கள் சிறை வைத்தது என்னை அல்ல புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும்  அம்மாவின் கொள்கைகளைத்தான். 

 

நீங்கள் ஒரு முறை அல்ல 100 முறை என்னை சிறையில் அடைத்தாலும் என்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டேன்,   நான் எப்போதும் அதிமுக காரன் தான் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை தொண்டர்களின் அடிப்படை உரிமை அந்த உரிமையை பெற்றுத்தரும் வரை என்னுடைய போராட்டம் ஓயாது.   மொத்தத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களுக்கு எனது நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன் என்னுடைய எண்ணங்களிலும் கொள்கையிலும் உறுதியாக நான் இருக்கிறேன் அவர் என் மீது எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே நான் இப்போது வைராக்கியமாக இருக்கிறேன்.  ஒருபோதும் அதிமுகவின் கொள்கையிலிருந்து நான் விலகமாட்டேன்,  பயந்து வேறு கட்சிக்கு ஒடவும்மாட்டேன்,   நான் எப்போதும் அதிமுக காரன்தான் .  என அதிரடியாக தெரிவித்தார்.  
 

click me!