திருமாவுக்கு ‘அரசியல் நேர்மைக்கான‘விருது! கொடுக்குறது யாரு? அப்படி என்ன சாதிச்சருன்னு பாருங்க

Published : Jul 07, 2019, 04:00 PM IST
திருமாவுக்கு ‘அரசியல் நேர்மைக்கான‘விருது! கொடுக்குறது யாரு? அப்படி என்ன சாதிச்சருன்னு பாருங்க

சுருக்கம்

விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ஏ.ஜி.நூராணி ஆகியோருக்கு ‘அரசியல் நேர்மைக்கான காயிதே மில்லத் ‘விருது கொடுக்கப்பட உள்ளதாக காயிதே மில்லத் கல்வி  மற்றும் சமூக அறக்கட்டளை அறிவித்துள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ஏ.ஜி.நூராணி ஆகியோருக்கு ‘அரசியல் நேர்மைக்கான
காயிதே மில்லத் ‘விருது கொடுக்கப்பட உள்ளதாக காயிதே மில்லத் கல்வி  மற்றும் சமூக அறக்கட்டளை அறிவித்துள்ளது.

2019 – ஆண்டிற்கான “அரசியல் நேர்மைக்கான காயிதே மில்லத் விருதிற்காக" தொல். திருமாவளவன் மற்றும் திரு. A.G. நூராணி அவர்களை 4.7.2019 அன்று நடந்த தேர்வுக் கமிட்டி கூட்டத்தில் தேர்வு செய்துள்ளதை அறக்கட்டளை ஏற்று அவர்கள் இருவரின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் ஜாதிபேதங்களால் ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் உரிமைகள் மற்றும் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து போராடி வருபவர். நாட்டின் அடிப்படை கொள்கைகளான மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, நலிந்த சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்கு ஜனநாயக ரீதியில் முழுமையாக அரசியல் சாசனத்தில் நம்பிக்கை கொண்டு போராடி வருபவர்.

திரு A.G. நூராணி அவர்கள் நாட்டின் தலைச்சிறந்த வழக்கறிஞரும், பன்னூலாசிரியரும் ஊடகவியலுரமான பேரறிஞர். மதச்சார்பற்ற கொள்ளைககளில் கடுகளவும் பிறழாமல் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகள் பாதுகாக்கப்பட தொடர்ந்து போராடி வருபவர். உச்சநீதிமன்ற வழக்குரைஞராக பல முக்கிய வழக்குகளில் வாதாடியுள்ளார். காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவிற்காகவும், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்காகவும் வாதாடி வெற்றிபெற்றது குறிப்பிடதக்கதாகும்.

அகவை 90 - ஐ நெருங்கும் நூராணி அவர்களின் நூல்கள் மற்றும் கட்டுரைகள் அனைத்தும் சரித்திர ஆவணங்காளாகும். R.S.S. பா.ஜ.க அதன் தலைவர்கள் கோல்வார்க்கர், சவார்கர் போன்றவர்களின் கொடுரமான முகத்தை R.S.S. & the B.J.P. என்ற நூலின் மூலம் நிருபித்துள்ளது உலகம் உள்ளளவும் நினைவில் கொள்ளப்படும்.

விருதுகள் பெறும் இருவரின் மேலும் விவரங்கள் தொகுக்கப்பட்டு அறக்கட்டளையால் வெளியிடப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் சிறப்பான கூட்டத்தில் இருவருக்கும் பாராட்டுப் பத்திரமும், தலா ரூபாய் 2.5 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படும். முன்புபோல் மகாத்மா காந்தியின் பெயரர் கோபாலகிருஷ்ண காந்தி அவர்களால் வழங்க ஏற்பாடு செய்கிறோம். நேரில் இவ்விருதுகளை பெற இருவரும் இசைந்துள்ளார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!