ஸ்டாலின் நினைத்தால் அது முடியும்... திறமையை நிரூபிப்பாரா? கிடுக்கிப்பிடி போட்ட பாமக...

By sathish kFirst Published Jul 7, 2019, 3:41 PM IST
Highlights

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதனை ஏற்று நாளை (8.7.2019) 'அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டம்' நடத்தி முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இந்த கூட்டத்தின் முடிவில், தமிழ்நாட்டில் சமூகநீதியை காப்பாற்ற முடியும். ஆனால், அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் மனது வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது பாமக.

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதனை ஏற்று நாளை (8.7.2019) 'அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டம்' நடத்தி முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இந்த கூட்டத்தின் முடிவில், தமிழ்நாட்டில் சமூகநீதியை காப்பாற்ற முடியும். ஆனால், அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் மனது வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது பாமக.

இதுகுறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமூகநீதிக்கு எதிரான 10% இடஒதுக்கீட்டை ஆளும் அதிமுக எதிர்க்கிறது. திமுகவும் எதிர்க்கிறது. எனவே, கொள்கை அடிப்படையில் எதிர்க்கட்சியான திமுகவும் ஆளும்கட்சியான அதிமுகவும் இந்த விவகாரத்தில் முரண்படவில்லை.

நாளை நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தில் இந்த கோட்பாட்டுக்கு முக்கியமான கட்சிகள் உடன்பட்டால் - தமிழ்நாட்டில் சமூகநீதியை காப்பாற்ற முடியும். ஆனால், அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் மனது வைக்க வேண்டும்.

திமுக கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டாக சமூகநீதியை காப்பாற்ற குரல்கொடுத்தால், தமிழ்நாட்டில் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை முறியடிக்கலாம். (திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளுக்கு தமிழ்நாடு புதுவையில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதும் கூடுதல் பலம் ஆகும்).

இந்த விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் எனவும், தமிழக அரசின் 10% இடஒதுக்கீட்டு எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்றுத்தர வேண்டும் எனவும் தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

(10% இட ஒதுக்கீடு விவகாரத்தின் பின்னணி)

தமிழகத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு, முன்னேறிய வகுப்பினருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்துள்ளது. இதை, தமிழக அரசு ஏற்கவில்லை.

தற்போது, முன்னேறிய வகுப்பினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீட்டை, மருத்துவக் கல்லுாரிகளில், தமிழக அரசு செயல்படுத்தினால், மருத்துவப் படிப்பில், 25 சதவீத இடங்களை, கூடுதலாக ஒதுக்குவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 'இதை ஏற்கக்கூடாது' என, சட்டசபையில், தி.மு.க., சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டது.

தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் போது, 'அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து பேசி, இதுகுறித்து முடிவு செய்யப்படும்' என முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, 8.7.2019 அன்று மாலை, 5:30 மணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம், முதல்வர் தலைமையில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான இடங்களில், முன்னேறிய வகுப்பினருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதா, வேண்டாமா என்று, முடிவு எடுக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை மு.க. ஸ்டாலின் பெற்றுத்தர வேண்டும் எனக் கேள்வியெழுப்பியுள்ளது.

click me!