
அமெரிக்காவில் குற்றம் இழைத்துவிட்டு ஜெயிலுக்கு செல்லும் காட்ஃபாதர்கள் அங்கிருந்து கொண்டே தங்களது வேலைகளை செய்து வருவது போல் இந்தியாவிலும் நடந்து வருவதாக முன்னாள் எச்சநிதிமன் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சசிகலா தரப்பை கலாய்த்துள்ளார்.
தற்போதைய நாட்டு நடப்பு, அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக அவலங்கள் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, தன் டுவிட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் அதிரடியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அதுவும் ஜல்லிக்கட்டுக்க ஆதரவாக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெற்ற போராட்டத்தின் போது அது குறித்த கருத்துக்கள், ஆலோசனைகள் போன்றவை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஜெயலலிதா மரணம், சசிகலா பொதுச் செயலாளர் ஆனது, சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை, நம்பிக்கை வாக்கெடுப்பு என பல பிரச்சனைகளில் கட்ஜுவின் பதிவுகள் அனைவராலும் வரவேற்கப்பட்டன.
இந்நிலையில் அவரது, டுவிட்டர் பதிவில், ஆள், பெயர் எதுவும் குறிப்பிடாமல் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சுட்டிக்காட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்படும், 'காட் பாதர்'கள் அங்கிருந்தே, தங்களது வேலைகளை செய்வது வழக்கம். அதேபோன்ற ஒரு விஷயம், தற்போது இந்தியாவிலும் எங்கேயோ நடந்து வருவது போல தோன்றுகிறது. என கட்ஜு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.ங
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்து கொண்டு தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைத்தான் இவ்வாறு கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.
கட்ஜுவின் இந்த டுவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.