அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு - பொதுமக்களின் கேள்விகளை சமாளிக்க முடியாமல் திணறல்

First Published Feb 20, 2017, 10:11 AM IST
Highlights


எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில் 122 எம்எல்ஏக்கள் அவருக்கு அதரவு அளித்து வெற்றிபெறச் செயதனர். ஆனால் ஓபிஎஸ் தரப்பு, என்எல்ஏக்கள் தங்கள் சொந்த தொகுதிக்குச் சென்று பொது மக்களிடம் ஆலோசனை பெற்று பின்னர் சாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

ஏற்கனவே சசிகலாவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். சசிகலாவிக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களுக்கு பொது மக்கள் போன் பண்ணி ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியிறுத்தி வந்தனர்.

ஆனால் பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி 122 எம்எல்ஏக்கள் சசிகலா தேர்வு செய்த எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து அவரை வெற்றிபெறச் செய்தனர். இதனால் எம்எல்ஏக்கள் மீது பொது மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

தொகுதிக்குள் நுழையவிட மாட்டோம் என சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பொது அன்னக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தங்களுக்கும், தங்களது வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளனர்.

அதன்படி அமைச்சர்கள் செல்லுர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன் மற்றும் ஏரராளமான எம்எல்ஏக்கள் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள அமைச்சர் இருவரின் வீடுகளுக்கும், ஈரோட்டில் உள்ள செங்சோட்டையின் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோன்று மற்ற அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வீடுகளுக்கும் விரைவில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!