
நம்பிக்கை வாக்கெடுப்பின போது கந்தர்வக் கோட்டை எம்எல்ஏ எங்கிருந்தார்? ..வெடித்துக் கிளம்பும் புதிய சர்ச்சை…
நீண்ட நாட்களாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் கந்தர்வக் கோட்டை அதிமுக எம்எல்ஏ ஆறுமுகம்,எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் கலது கொண்டிக்க முடியும் என கேள்வி எழுந்துள்ளது,
கடந்த சனிக்கிழமையன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் இபிஎஸ் க்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் எடப்பாடிக்கு 122 எம்எல்ஏக்கள் வாக்களித்தாக தனபால் அறிவித்தார். ஓபிஎஸ்க்கு ஆதரவாக 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தாகவும் சபாநாயகர் தெரிவித்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார்.
ஆனால் எடப்பாடிக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு தந்தார்களா என்ற ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 134..அதில் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் வாக்கெடுப்பை புறக்கணித்தார்.ஓபிஎஸ்க்கு 11 பேர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். மீதமுள்ள 122 பேரும் எடப்பாடிக்கு ஆதரவி தெரிவித்திருந்ததாக தனபால் அறிவித்தார்.
ஆனால் கந்தர்வக் கோட்டை அதிமுக எம்எல்ஏ ஆறுமுகம் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், பின்னர் எப்படி அவர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருப்பார்? என கேள்வி எழுந்துள்ளது.
சபாநாயகர் தனபால் பொய் கணக்கு காட்டியிருக்கிறாறா? என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.