எந்த நேரத்திலும் அரெஸ்ட் ஆகும் கதிர் ஆனந்த் … கடும் நெருக்கடி கொடுக்கும் தேர்தல் ஆணையம்…

By Selvanayagam PFirst Published Apr 11, 2019, 8:06 AM IST
Highlights

வேலுார், காட்பாடியில் வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணம் 11 கோடியே 50லட்சம் ரூபாய் சிக்கிய வழக்கில்  தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட மூன்று பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதையடுத்து அவர் இன்று கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
 

வேலுார் மக்களவைத்  தொகுதி, திமுக  வேட்பாளராக, கதிர்ஆனந்த் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து, நீதிமன்ற அனுமதியுடன் வழக்குப்பதிவு செய்து, அறிக்கை அனுப்ப, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். 

இதையடுத்து, வேலுார் மக்களவைத் தொகுதி, தேர்தல் செலவின அலுவலர் சிலுப்பன், காட்பாடி போலீசில், கடந்த 8 ஆம் தேதி  தேதி புகார் செய்தார்.
 
அந்த புகாரில்  காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில், தாமோதரன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் வரமாதன வரித்துறையினர் நடத்திய சோதனையில், 11 கோடியே, 48 லட்சத்து, 51 ஆயிரத்து, 800 ரூபாய் சிக்கியது. இதை, பூஞ்சோலை சீனிவாசன் என்பவர், வாக்காளர்களுக்கு வழங்க, வைத்திருந்ததாக தெரிவித்தார்.

எனவே, வேட்பு மனு தாக்கலின் போது, வழங்கிய உறுதிமொழி பத்திரத்தில், தவறான தகவல் கொடுத்தது மற்றும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருந்தது குறித்து, கத்ல் ஆனந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கதிர் ஆனந்த் சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது பிரமாண பத்திரத்தில், தவறான தகவல் அளித்தல், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, தற்போது போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட விபரம் குறித்த அறிக்கை, வேலுார் மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், கதிர்ஆனந்த் உட்பட, மூவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

click me!