என்னை பயமுறுத்த நினைச்சா அது நடக்காது !! அல்லு தெறிக்கவிடும் துரை முருகன் !!

Published : Apr 10, 2019, 11:36 PM IST
என்னை பயமுறுத்த நினைச்சா அது நடக்காது !! அல்லு தெறிக்கவிடும் துரை முருகன் !!

சுருக்கம்

என்னைப் பயமுறுத்தினால் திமுகவினர் பயந்துவிடுவார்கள் என்று வருமான வரித்துறையினர் தப்புக்கணக்குப் போடுகிறார்கள் என்றும் இதற்கொல்லாமம் அஞ்சுகிற  ஆள் நானில்லை என்றும் திமுக பொருளாளர் துரை ஆருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். கடந்த வாரம் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் துரைமுருகனின் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாகக் 11 கோடியே 48 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டன. 

இதுதொடர்பாக துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் மற்றும் உதவியாளர்கள் சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் மூன்று பிரிவுகளில் காட்பாடி போலீஸார் இன்று வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம்  பேசிய துரைமுருகன், எங்கள்  மீது போடப்பட்டுள்ள வழக்கைச் சந்திப்போம் என்றும்  நீண்ட நாள்களுக்குப் பிறகுதான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும். அப்போது, பார்த்துக்கொள்கிறோம் என்றும் துரை முருகன் தெரிவித்தார்.

வருமானவரித் துறை சோதனைக்குப் பிறகும் மக்கள் அதிக ஆசையோடு எங்களை வரவேற்கிறார்கள். அரசாங்கத்தின் மீது வெறுப்பைக் காட்டுகிறார்கள். 
பொது மக்கள் எங்களுக்கு வாக்களிப்பதாக உறுதியளிக்கிறார்கள். தி.மு.க-வில் தலைவருக்கு அடுத்து பெரிய பொறுப்பில் நான் இருக்கிறேன். என்னைப் பயமுறுத்தினால் தி.மு.க-வினர் பயந்துவிடுவார்கள் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!