
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உயிரிழந்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.மேலும் கஸ்தூரி மகாலிங்கத்தின் மேற்படிப்புச் செல்வையும் தமிழக அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ இடங்களுக்கான நீட் நுழைவுத் தே்ாவு இன்று நடைபெற்றது. சிபிஎஸ்இ நடத்தும் தோ்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சத்து 26 ஆயிரம் மாணவா்கள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழகத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவா்கள் தே்ாவு எழுதினர்.
இந்தியா முழுவதும் 2 ஆயிரத்து 255 தோ்வு மையங்களும், தமிழகம் முழுவதும் 170 மையங்களும் அமைக்கப்பட்டள்ளன. தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவா்கள் கேரளா, கா்நாடகம், ஆந்திரா, சிக்கிம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தோ்வு எழுதினர்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விளக்குடியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவன் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு எழுதுவதற்காக சென்னிருந்தார். அவருடம் தந்தை கிருஷ்ணசாமியும் சென்றிருந்தார்.
கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு மையத்துக்குள் சென்றிருந்த நேரம் விடுதியில் இருந்த அவரது தந்தை கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு க்ஷற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் விளங்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.