காஷ்மீர் பிரிக்கப்பட்ட பிறகு முதல் தீவிரவாத தாக்குதல் !! பொது மக்கள் 2 பேர் பலி !!

By Selvanayagam PFirst Published Aug 27, 2019, 9:08 PM IST
Highlights

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த 5 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதற்கான சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.

இதையடுத்து எல்லையிலும், மாநிலத்தின் உள்பகுதியிலும் பாதுகாப்பு பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.


 
இந்நிலையில் காஷ்மீரில் உள்ள டிரால் லாச்சி பகுதியில் இருந்து துப்பாக்கிக் குண்டு காயத்துடன் காஷ்மீரைச் சேர்ந்த இருவரின் உடல்களை பாதுகாப்புப்படையினர் கடந்தவாரம் மீட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.  

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட  பின்னர் முதல் பயங்கரவாத தாக்குதல் அங்கு நடந்துள்ளது. ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் காதிர் கோலி, அவரின் உறவினர் மன்சூர் அகமது கோலி ஆகியோர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இருவரும் கடந்த 18 மற்றும் 19-ம் தேதிகளில் ட்ரால் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. மலைப்பகுதியில் ஜெய்ஷ் முகமது பயங்கரவாதிகளால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

click me!