சட்டசபையில் பிட்டுப்படம் பார்த்தவருக்கு அடித்தது லக்...!!! தேடிவந்து வாசலில் விழுந்த துணை முதல்வர் பதவி...!

By Asianet TamilFirst Published Aug 27, 2019, 8:03 PM IST
Highlights

லட்சுமண் சங்கப்பா சவதி, கர்நாடக எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சட்டப் பேரவைக்குள் அமர்ந்து சொல்போனில் ஆபாச படம் பார்த்தவர் ஆவார்.  இவருடன் இணைந்து  பலான வீடியோ பார்ந்த இரண்டு அமைச்சர்களும் பதவிகளை ராஜினமா செய்துவிட்டு அரசியலுக்கே முழுக்கு போட்டுவிட்ட நிலையில். அதற்கு காரணமாக இருந்த சங்கப்பா சாவதி  இப்போது துணை முதல்வராகியுள்ளார்.  இப்படிபட்ட மோசமான பின்னணி கொண்ட ஒருவரை துணை முதல்வராக நியமிக்கக்கூடாது என கர்நாடக பாஜகவின் சங்கப்பா சாவதிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.   
 

கர்நாடக சட்டப்பேரவையில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு எடியூரப்பா  துணை முதலமைச்சர் பதவி வழங்கி கவுரவித்துள்ளார் என  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ்,மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்க்க  சங்கப்பா சாவதி உதவினார் என்பதற்காகத்தான்  அவருக்கு துணை முதல்வர் பதவியை எடியூரப்பா வழங்கினார் என்றும் விமர்சிக்கப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்ததாக எழுந்த சர்ச்சையில் சிக்கியவர் தற்போது அம்மாநிலத்தின்  துணை முதலமைச்சராகி உள்ளார்.

மாஐக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து  கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் எடியூரப்பா. தன்னுடைய அரசில் 3 துணை முதல்வர்கள் இருப்பார்கள் என்று ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியுள்ளார்.  அதன்படியே  துணை முதல்வர்களாக  கோவிந்த் அஸ்வத் நாராயணன், மக்தப்பா கரஜோல், லக்‌ஷ்மண் சங்கப்பா சாவதி, ஆகியோரை துணை முதலமைச்சர்களாக நியமித்துள்ளார்.  

இவர்களில் லட்சுமண் சங்கப்பா சவதி, கர்நாடக எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சட்டப் பேரவைக்குள் அமர்ந்து சொல்போனில் ஆபாச படம் பார்த்தவர் ஆவார்.  இவருடன் இணைந்து  பலான வீடியோ பார்ந்த இரண்டு அமைச்சர்களும் பதவிகளை ராஜினமா செய்துவிட்டு அரசியலுக்கே முழுக்கு போட்டுவிட்ட நிலையில். அதற்கு காரணமாக இருந்த சங்கப்பா சாவதி  இப்போது துணை முதல்வராகியுள்ளார்.  இப்படிபட்ட மோசமான பின்னணி கொண்ட ஒருவரை துணை முதல்வராக நியமிக்கக்கூடாது என கர்நாடக பாஜகவின் சங்கப்பா சாவதிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.   

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள சங்கப்பா சாவதி, பாஜகவில் தேசிய அளவில் உள்ள தலைவர்களே தன்னை துணை முதல்வராக ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு என்மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது, கட்சியை இன்னும் அதிகம்  வலுபடுத்துவேன். அரசுக்கு நல்லபெயர் பெற்றுத்தருவேன். என்றும்,  நான் எந்தப் பதவியையும் முன்வந்து கேட்கவில்லை மூத்த தலைவர்கள் கொடுத்தார்கள் அதை பெற்றுக்கொண்டேன் என்றார். கர்நாடகத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணியில் ஆட்சியை வலுவழக்க வைத்ததில் சங்கப்பா சாவதியின் பங்கு முக்கியமானது என்பதாலும், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை கட்சித்தாவ செய்து பாஜக அரசு உருவாக காரணமாக இருந்தவர் என்பதால்தான் சங்கப்பா சாவதிக்கு துணைமுதல்வர்  பதவி என்றும் கார்நாடக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்டுகிறது. 

click me!