அனலடிக்கும் காஷ்மீர் பிரச்சனை ! திமுக தலைமையில் வரும் 10-ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் … ஸ்டாலின் அறிவிப்பு !!

Published : Aug 06, 2019, 10:18 PM IST
அனலடிக்கும் காஷ்மீர்  பிரச்சனை !   திமுக தலைமையில் வரும் 10-ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் … ஸ்டாலின் அறிவிப்பு !!

சுருக்கம்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக  திமுக தலைமையில் வரும் 10-ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.  

அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் திங்களன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. 
 
அதன் தொடர்ச்சியாக இன்று  மக்களவையிலும் இம்மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு காங்கிரஸ், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன  
 
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக  திமுக தலைமையில் வரும் 10-ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்த உள்ளதாகத் தெரிகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?