கருணாநிதி சிலை திறப்பு விழா ! சென்னை வந்த மம்தாவை வரவேற்ற மு.க.ஸ்டாலின் !!

By Selvanayagam PFirst Published Aug 6, 2019, 8:21 PM IST
Highlights

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவரகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பதற்காக  சென்னை வந்ததுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பூங்கொத்து வரவேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் அவருக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார்.

சென்னையில், நாளை  நடக்கும், முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதி சிலை திறப்பு விழாவில், மேற்கு வங்க முதலமைச்சர் , மம்தா பானர்ஜி பங்கேற்று திறந்து வைக்கிறார். 
கருணாநிதியின் நண்பரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா இவ்விழாவில் பங்கேற்பதாக இருந்தார். ஆனால் காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அவர் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

கீழே அமர்ந்து, பேனா பிடித்து, கட்டுரை எழுதுவது போல வடிவமைக்கப்பட்டுள்ள, கருணாநிதியின் வெண்கல சிலையை, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்துகிறார். 
தி.க., தலைவர், கி.வீரமணி தலைமை வகிக்கிறார். புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்னை வந்தார். அவரை வரவேற்று பூங்கொத்து கொடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் அவருக்கு திருவள்ளுவர் கிலையை பரிசாக் வழங்கினார்.

click me!