கரூர் துயர சம்பவம்.. தவெக சார்பில் தீபாவளி கொண்டாட வேண்டாம்..! புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்..!

Published : Oct 18, 2025, 01:58 PM ISTUpdated : Oct 18, 2025, 02:18 PM IST
Bomb Threat At TVK chief Vijay Residence

சுருக்கம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தவெக சார்பில் யாரும் தீபாவளி கொண்டாட வேண்டாம் என தவெக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி இருகிறார்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தவெக சார்பில் யாரும் தீபாவளி கொண்டாட வேண்டாம் என தவெக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி இருகிறார்.  கரூரில் கூட்ட நெரிசல்ல பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் சென்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளார். இந்நிலையில் தொண்டர்களும், நிர்வாகிகளும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என தவெக தலைமை அறிவுறுத்தி உள்ளது. பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது மிகப்பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது.

இந்நிலையில் கரூர் சம்பவத்தில் நம்மை விட்டு பிரிந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபாவளி கொண்டாட வேண்டாம் எனவும், மீண்டும் தீபாவளி பண்டிகை கட்சி சார்பில் கொண்டாடினால் அது பெரும் சர்ச்சையையும் வேதனையும் உருவாக்கும். ஆகையால் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை தவிர்த்து விடுங்கள். தற்போது நமது முழு கவனமும் உயிரிழந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த வருடம் கட்சி சார்பில் அறிவிப்பு வெளியானதற்கு பிறகு கொண்டாட்டங்களை தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள சூழ்நிலையில் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தலைமை கழகத்தின் அறிவிப்பு இல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சியிலும், கொண்டாட்டங்களும்விர்க்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!