“விருந்துக்கா வந்திருக்கேன்..வெளியே போன்னு சொல்றீங்க..? திமுக அலுவலகத்தில் இருந்து துரத்தப்பட்ட ஜோதிமணி எம்பி

By Raghupati RFirst Published Jan 31, 2022, 1:27 PM IST
Highlights

தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.  இதன்படி, வரும் பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

கரூர் மாவட்டத்தில் இன்று ஜனவரி 28 தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியது. கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சியில் 48 வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. குளித்தலை நகராட்சியில் உள்ள 24வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கும் பள்ளப்பட்டி நகராட்சியில் 27 வார்டுகளிலும் புகளூர் நகராட்சியில் 24 வார்டுகளிலும் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது.

இதேபோல அரவக்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகள் புலியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உப்பிடமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் மருதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் 15 வார்டுகள் நங்கவரம் பேரூராட்சியில் 18 வார்டுகள் என கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களைத் தேர்வு செய்து அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக - காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் போட்டியிடும் இடங்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வந்தனர். இன்று வழக்கம் போல, திமுக அலுவலகத்தில் தேர்தல் கூட்டணி  பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பேச்சுவார்த்தையின் போது, திமுகவினர் தன்னை வெளியேற சொன்னதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றச்சாட்டு தெரிவித்து இருக்கிறார்.

திமுக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர், ‘உங்க ஆபிசுக்கு வந்து இருக்கேன். எப்படி நீங்க வெளிய போ அப்படினு சொல்லலாம். விருந்துக்கா வந்துருக்கேன்.மரியாதை இல்லாம பேசுறீங்க. நான் என்ன இவங்க வீட்டுக்கா வந்து இருக்கேன். வெளியே போன்னு சொல்றதுக்கு’ என்று சொல்ல, அருகில் இருந்த கட்சியினர் ஜோதிமணி எம்பியை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கரூரில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  இந்த பேச்சுவார்த்தையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

कांग्रेस सांसद जोतिमणि ने करूर डीएमके कार्यालय में गठबंधन वार्ता से नाम वापस लिया pic.twitter.com/fxdGIB9XO4

— 𝑽𝒐𝒊𝒄𝒆 𝑶𝒇 𝑲𝒂𝒓𝒖𝒓 ♻️ (@voiceofkarur47)

 

click me!