பதவி தந்த ஜெயலலிதா உடல் அருகே சிரித்து கொண்டே செல்ஃபியா? - அதிமுக தொண்டர்கள் ஆவேசம்

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 12:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
பதவி தந்த ஜெயலலிதா உடல் அருகே சிரித்து கொண்டே செல்ஃபியா? - அதிமுக தொண்டர்கள் ஆவேசம்

சுருக்கம்

நேற்று மறைந்த முதலவர் ஜெயலலிதா உடல் அருகே சசிகலா குடும்பத்தினர் தவிர்த்து பரபரப்பாக காணப்பட்டவர் நடிகர் கருணாஸ்

படிக்கட்டுக்களில் அங்குமிங்கும் ஓடுவதும் அஞ்சலி செலுத்த வந்தவர்களை வரிசை படுத்தும் வேலைகளை செய்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் பொது ஜி.கே வாசன் வேல்முருகனுக்கே அல்வா குடுத்த அதிமுக தலைமை அரசியலுக்கே புதுமுகமான கருணாசுக்கு ஒரு சீட்டை அள்ளி கொடுத்தது. பின்னர்தான் தனது கட்சிக்கே பெயர் வைத்த கருணாஸ் தேவர் புலிப்படை சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டார்.

திமுகவின் மூத்த தலைவரான சுப.தங்கவேலனின் மகன் சுப.திவாகரனை ஜெயலலிதா புண்ணியத்தால் தோற்கடித்தார்

இப்படி ஜெ. புண்ணியத்தால் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ்,துக்க நாளான நேற்று அதிமுக தொண்டர்கள் கதறி அழுத வேளையில் ஜெயலலிதா உடல் முன்பாக சிரித்து போஸ் குடுத்து செல்பி எடுத்து கொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

துக்க வீட்டில் செல்பி எடுப்பதே தவறு அதிலும் சிரித்துகொண்டு செல்பி எடுப்பது மிகப்பெரும் தவறு என்கிறனர் அதிமுக தொண்டர்கள்.

கருணாஸ் மட்டுமலல் அம்மாவால் பதவி சுகத்தை அனுபவிக்கும், அனுபவித்த பெரும்பாலானோர் இப்படிதான் என்று குமுறுகின்றனர் உண்மை அதிமுக விசுவாசிகள்.

PREV
click me!

Recommended Stories

Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!
ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!