
சென்னையில் செய்தியாளாக்ளை சந்தித்த நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் பேட்டி என்ற பெயரில் அதிரடி, காமெடி, சரவெடிகளை அள்ளி வீசினார்.
அதிமுக ஒற்றுமை பற்றி, பேசிய அவரிடம் செய்தியாளர்கள், சரமாரியாக கேள்வி எழுப்பினர். இரண்டு அணிகள் ஒற்றுமை பற்றி பேசும் நீங்கள், அன்று கூவத்தூரில் தங்கியது ஏன்...? என கேட்டனர்.
அதற்கு சளைக்காமல் பதில் அளித்த கருணாஸ், ''நான் கூவத்தூரில் தங்கியதை யாராவது நிரூபித்தால், அரசியலை விட்டே போகிறேன். நான் அவர்களுடன் தங்கவில்லை. உறங்கவில்லை" என்று தெரிவித்தவர், திடீரென தடாலடியாக ''பக்கத்தில் உள்ள நண்பரின் பண்ணை வீட்டில் தங்கி இருந்தேன்'' என்று தெரிவித்தார்.
முதலில் ''உச்சஸ்தாயில்'' சவால் விட்ட கருணாஸ், அடுத்த நொடியே பக்கத்து பண்ணையில் தங்கி இருந்தேன் என்று தடாலென்று இறங்கி பதிலளித்ததை கேட்ட செய்தியாளர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்