
ஓ.பி.எஸ். மற்றும் அவரது அணியில் இருப்பவர்கள் பகல் கனவு காணாமல் இரவில் ஓய்வெடுக்க வேண்டும் என்று ஈ.பி.எஸ். ஆதரவாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.இதன் முதல் கூட்டம் கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய ஓ.பி.எஸ். எடுத்த எடுப்பிலேயே குண்டைத் தூக்கி போட்டார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் வரும் என்பதே அந்த அணுகுண்டு. சீரான இடைவெளிகளில் ஸ்கோர் செய்து கொண்டே சென்ற ஓ.பி.எஸ்., எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் அதிமுகவை நிலைநிறுத்தும் என்று ஷார்ப்பான வசனங்களை பேசி அசத்தினார்.
பன்னீர்செல்வத்தின் இந்த திடீர் பேச்சு ஆட்சி கலைப்புக்கான அஸ்திவாரமாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது அணியில் இருப்பவர்கள் பகல் கனவு காணாமல் இரவில் ஓய்வெடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் திருப்பூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான குணசேகரன் தெரிவித்துள்ளார். உடன் இருப்பவர்களின் பேச்சைக் கேட்காமல் ஓ.பி.எஸ். பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் குணசேகரன் வலியுறுத்தி உள்ளார்.