
தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்திப்பதற்காக பன்னீர்செல்வம் அணியினர், நேற்றே சுற்று பயணத்தை தொடங்கி விட்டனர்.
முன்னதாக, பன்னீர் வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், சுற்று பயண நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் என்னென்ன பேசுவது? என்று விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுதான் நம் அணியை வலு சேர்ப்பதற்கான ஆரம்ப கட்ட முயற்சி என்பதால், கட்சிக்காரர்கள் அனைவரையும் நம் பக்கம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.
அதற்கு, சசிகலாவை திட்டினால் மட்டும் போதாது. ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்பதே நமது முக்கிய பேச்சாக இருக்க வேண்டும்.
அத்துடன், ஜெயலலிதாவை எப்படி எல்லாம் சசிகலா கொடுமை படுத்தினார். கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும் சசிகலாவை கண்டு எப்படி எல்லாம் பயந்து நடுங்கினார்கள் என அத்தனையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அனைத்தையும் விலாவாரியாக பன்னீர் மற்றும் அவரது அணியினர் பேசி உள்ளனர்.
அதன் பின்னர் கூட்டத்திற்கான செலவுகளை எல்லாம் எப்படி சமாளிப்பது? என்று விவாதிக்கப்பட்டது. அப்போது, கட்சிக்காரர்கள் யாரையும் இப்போதைக்கு செலவு செய்ய அனுமதிக்க கூடாது.
அப்படி அவர்கள் செலவு செய்தால், நம் மீது அதிருப்தியை ஏற்படுத்தி விடும். எனவே, அனைத்து செலவுகளையும் நாமே பார்த்து கொள்ளலாம் என்று பன்னீர் திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.
இந்த விவாதங்கள் அனைத்தும் முடிந்த பின்னரே, பன்னீரின் சுற்று பயணம், காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்கி இருக்கிறது.
இனி ஒவ்வொரு இடத்திலும், அவர் என்னென்ன பூகம்பங்களை கிளப்ப போகிறார்? அதை எடப்பாடி தரப்பு எப்படி சமாளிக்க போகிறது? என்பதை அனைவரும் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.