தினகரனே முதல்வர் வீட்டு படியேறி போயி நிற்கத்தான் செய்யணும்...! காட்டு தீயை பற்ற வைத்த கருணாஸ்..!

By Vishnu PriyaFirst Published Jan 9, 2019, 2:45 PM IST
Highlights

தொகுதி மக்களுக்கு நல்லது பண்ணனும்னா முதல்வரை சந்திச்சுதான் ஆகணும். வேறென்ன பண்ண? எங்க மாவட்ட அமைச்சருக்கும் எனக்கும் ஒத்து வராது. அதனால இப்படித்தான் போயாகணும். கொளத்தூர் தொகுதிக்கு எதுவும் தேவைன்னா ஸ்டாலின், முதல்வரைத்தான் பார்க்கணும். இவ்வளவு ஏன், ஆர்.கே.நகர் தொகுதிக்கான திட்டங்களுக்காக தினகரனே முதல்வரைத்தான் பார்த்தாகணும்.

எடப்பாடி அரசுக்கு எதிராக சகலவித சண்டை தந்திரங்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் டி.டி.வி. தினகரன். ஆனாலும் பப்பு வேகவே மாட்டேங்குது. ஆட்சி கலைய கூட வேண்டாம், அட கலையுறா மாதிரி ஒரு சீன் கூட உருவாக மாட்டேங்குதே! அப்படிங்கிறதுதான் தினாவின் கடும் கோபமே. 

இந்நிலையில், சுயேட்சை அணியில் இருக்கும் தினகரனின் அபிமானியான எம்.எல்.ஏ. கருணாஸ் முதல்வர் எடப்பாடியாரை சந்தித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடியாருக்கு எதிராக வார்த்தைகளில் வாள் செருகி வீசினார்! என்று கைது செய்யப்பட்ட கருணாஸ் இப்படி திடுதிப்புன்னு முதல்வரை சந்தித்ததை தினகரனால் ஜீரணிக்க முடியவில்லை. திடீரென கட்சி துவங்கி, சசிகலாவின் ஆசீர்வாதத்தை பெற்று அ.தி.மு.க.வில் கூட்டணி வைத்து சீட் வாங்கி, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் எம்.எல்.ஏ.வுமாகிவிட்ட கருணாஸை தினகரன் ‘திடீர் எம்.எல்.ஏ.!’ என்றுதான் அழைப்பார்.

 

சசிகலாவின் அபிமானியாக இருக்கும் வகையில் தினகரனுக்கும் சப்போர்ட்டீவான நபர்தான் இவர். அதனால், அதற்கும் சேர்த்துத்தான் கருணாஸை கட்டம் கட்டுகிறது அரசு. சூழல் இப்படி இருக்கும் நிலையில், இவர் போயி முதல்வரை சந்தித்ததை நினைத்து கடும் கோபமாகிவிட்டார் தினகரன். இந்த விவகாரம் பற்றி ஓப்பனாய் பேசியிருக்கும் கருணாஸ் “சபாநாயகருக்கு எதிராக நான் கொடுத்திருந்த தனி தீர்மானத்தை வாபஸ் பெறப்போகிறேன்! என்று டி.டி.வி.யிடம் சொல்லிவிட்டுதான் சென்றேன்.  

சட்டசபை செயலாளர் அலுவலகம் அருகே அமைச்சர் வேலுமணியை சந்தித்தேன். அவரு என்னோட நண்பர், நலன் விரும்பி. அவரு ‘ஏன் இன்னும் கவர்மெண்டு கூட மோதி, முறைச்சுட்டே இருக்கீங்க? தொகுதிக்கான கோரிக்கைகளை முதல்வரை சந்திச்சு கொடுங்க. நான் சிபாரிசு பண்றேன்.’ன்னு சொன்னார். இப்படித்தான் முதல்வருடனான சந்திப்பு நடந்துச்சு. ஆனால் இதை நான் டி.டி.வி.யிடம் சொல்லலை. 

தொகுதி மக்களுக்கு நல்லது பண்ணனும்னா முதல்வரை சந்திச்சுதான் ஆகணும். வேறென்ன பண்ண? எங்க மாவட்ட அமைச்சருக்கும் எனக்கும் ஒத்து வராது. அதனால இப்படித்தான் போயாகணும். கொளத்தூர் தொகுதிக்கு எதுவும் தேவைன்னா ஸ்டாலின், முதல்வரைத்தான் பார்க்கணும். இவ்வளவு ஏன், ஆர்.கே.நகர் தொகுதிக்கான திட்டங்களுக்காக தினகரனே முதல்வரைத்தான் பார்த்தாகணும். 

ஒரு எம்.எல்.ஏ.வாக தன் தொகுதி மக்களுக்கு நல்லது பண்றதுக்காக தினகரன், முதல்வர் அறை படிக்கட்டில் ஏறிப்போயி நின்னுதான் ஆகணும்னா, அதை செய்யாமல் விடுவாரா?” என்று நியாயம் கேட்டுள்ளார் அசத்தலாக. திடீர் எம்.எல்.ஏ. கருணாஸின் இந்த திடீர் வேகம் தினகரன் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறதாம். அதேவேளையில் தினகரனின் ஆதரவாளர்களோ ‘ஆர்.கே.நகருக்காக தன் சொத்துக்களை வித்தும் கூட செலவு பண்ணுவாரே தவிர, எடப்பாடி வீட்டு படியையெல்லாம் எங்க தலைவர் தினகரன் மிதிக்கவே மாட்டார் ஒருநாளும்.’ என்று பொங்கியிருக்கிறார்கள்.

click me!