சிறையில் உப்பில்லாத சோறு! காஞ்சி போன சப்பாத்தி! கருணாஸ் மருத்துவமனைக்கு சென்று படுத்த ரகசியம்!

By vinoth kumarFirst Published Oct 4, 2018, 9:35 AM IST
Highlights

தமிழ்நாட்டுல ஜெயிலே எங்க ஆளுங்களுக்கு தான் கட்டி உட்டுருக்காங்க என்று வீர வசனம் பேசிய கருணாஸ் 3வது வழக்கில் முன்ஜாமீன் கோரியுள்ளதுடன் போலீசார் தேடியதும் நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டதன் காரணம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டுல ஜெயிலே எங்க ஆளுங்களுக்கு தான் கட்டி உட்டுருக்காங்க என்று வீர வசனம் பேசிய கருணாஸ் 3வது வழக்கில் முன்ஜாமீன் கோரியுள்ளதுடன் போலீசார் தேடியதும் நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டதன் காரணம் தெரியவந்துள்ளது. 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிலையில் முதலில் கருணாஸ் அடைக்கப்பட்டார். அந்த சிறையில் எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் கூட சாப்பாடு விஷயத்தில் கட்டுப்பாடு விதிக்க முடியாது. 

 காலையில் பொங்கலில் தொடங்கி மசால் தோசை வரை சகஜகமாக கிடைக்கும். இதே போல் பிற்பகலில் கோழிக்குழம்புடன் சுடு சோறும் புழல் சிறையில் சாதாரண விஷயம். இரவும் கூட கோழிக்குழம்புடன் சப்பாத்தி கிடைக்கும். இதனால் தான் கருணாசை புழல் சிறையில் அடைக்காமல் வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு கைதிகளோடு கைதியாக இருந்தாலும் கூட கருணாஸ் அங்கிருந்த சமயத்தில் தான் அடுத்தடுத்து சிறைகளில் ரெய்டு நடைபெற்றது. இதனால் வேலூர் சிறையில் கைதிகள் எந்த சலுகையையும் பெற முடியாத நிலை ஏற்பட்டது. 

கருணாசுக்கும் கூட வெளியில் இருந்த உணவுகள் அனுமதிக்கப்படவில்லை.  கருணாஸ் அடைக்கப்பட்டிருந்த அறையில் பேன் கூட இல்லை. மேலும் தலவானி ஒன்றும் பெட்ஷீட் ஒன்றும் மட்டுமே கருணாசுக்கு கொடுக்கப்பட்டது. சாப்பாட்டு விஷயத்தை பொறுத்தவரை காலை மற்றும் பிற்பகலில் உப்பில்லாத சாதமும், பருப்பும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இரவும் கூட காய்ந்து போன சப்பாத்தியும் பருப்பும் மட்டுமே கருணாஸ்க்கு கிடைத்துள்ளது.இதனால் சிறையில் இருந்த ஆறு நாளும் கருணாஸ்க்கு நரகமாகியுள்ளது. மேலும் இரவில் ஒரு பெக்காவது போடவில்லை என்றால் கருணாஸ்க்கு தூக்கமே வராது. 

ரெய்டு காரணமாக சிறையில் பீடி கூட கைதிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால் தான் ஜாமீனில் வெளியே வந்த கருணாஸ் மீண்டும் சிறைக்கு மட்டும் சென்றுவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். மேலும் போலீஸ் தேடுகிறது என்பதை தெரிந்து கொண்டு வீர வசனத்தை எல்லாம் மறந்து மருத்துவமனையில் போய் படுத்துள்ளாராம் கருணாஸ்.

click me!