கருணாஸ் கைதுக்கு எதிர்ப்பு...! முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டம்!!

Published : Sep 23, 2018, 01:34 PM IST
கருணாஸ் கைதுக்கு எதிர்ப்பு...! முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டம்!!

சுருக்கம்

எம்.எல்.ஏ. கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

எம்.எல்.ஏ. கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பேசிய பேச்சு ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, அவர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஜாதிக்கலரவத்தை தூண்டும் வகையில் பேசுதல், கூட்டுச்சதி என எட்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  கருணாசை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை6 6.30 மணியளவில் கருணாஸை போலீசார் கைது செய்தனர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக் அழைத்து வரப்பட்ட அவரிடம், 3 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.

 

இதனைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்ற நிதிபதி கோபிநாத் வீட்டில் கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். அக்டோபர் 5 ஆம் தேதி வரை கருணாஸ் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். கருணாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவை, கோவில்பட்டி, திருவாடனை, உசிலம்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தின்போது, கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். கருணாசை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள், தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..