தொகுதிப் பிரச்சனைக்காகத்தான் இபிஎஸ் சந்திச்சேன்… நான் எப்பவுமே டி.டி.வி ஆதரவாளர்தான் !! கருணாஸ் அதிரடி !!

Published : Jan 09, 2019, 08:51 AM IST
தொகுதிப் பிரச்சனைக்காகத்தான் இபிஎஸ் சந்திச்சேன்… நான் எப்பவுமே டி.டி.வி ஆதரவாளர்தான் !! கருணாஸ் அதிரடி !!

சுருக்கம்

எனது திருவாடானை தொகுதி மக்களுக்காவே நான் முதலமைச்சரை சந்தித்தித்தேன் என்றும் மற்றபடி நான் எப்பவுமே தினகரனின் ஆதரவாளர்தான் என்றும் நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவாடானை தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸ், முதலமைச்சர் எடப்படி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசினார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது எம்எல்ஏ பதவியை பறிப்பதற்கான சட்டநடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த கருணாஸ் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்.

பின்னர் அதை வாபஸ் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் கடந்த வாரம் கருணாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சமாதானம் ஆனார். இதனால் அரசுக்கும் கருணாசுக்கும் இடையே சுமூக உறவு ஏற்பட்டதாக பேசப்பட்டது. கருணாஸ் இபிஎஸ்சிடம் சரண்டர் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கருணாஸ், நான் முதலமைச்சரிடம் ஒன்றும் சரண்டர் ஆகவில்லை. எனது தொகுதி பிரச்சனைகளுக்காத்தான் அவரை சந்தித் தேன் என்று தெரிவித்தார்..

நான் எப்பொழுதுமே டி,டி,வி,தினகரனின் ஆதரவாளர்தான் என்றும் அதில் எந்தவித மாற்றமுமில்லை என்றும் கருணாஸ் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!