
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்த அறிக்கை சற்று முன் வெளியானது. இதில் கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவேரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தொண்டர்கள் அழுதவாறு, தங்களுடைய தலைவர் மீண்டு வர வேண்டும் என குரல் எழுப்பி வருகிறார்கள்.
தொண்டர்களை, பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள இந்த அறிக்கை வெளியானதில் இருந்து, எங்கு பார்த்தாலும் தொண்டர்களின் அழுகுரல் கேட்டு வருகிறது. கருணாநிதியின் உடல் நிலையில் மேலும் பினனடைவு ஏற்ப்படுள்ளதே இதற்கு காரணம்.
ஏற்கனவே கடந்த வாரம் 27 மற்றும் 28ம் தேதிகளில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு திடீரென உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் அவர் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது.
முதுமை காரணமாக அவரது உடல் மருத்துவ சிகிச்சைகளை ஏற்றக் கொள்ளவில்லை என்றும் 24 மணி நேரத்திற்கு பிறகே எதுவும் உறுதியாக சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததை தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள அறிக்கையால் காவேரி மருத்துவமனை வளாகத்தில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
வயதானவர்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்ணீரும் கபளையுமாய், தங்களுடைய தலைவரை எழுந்து வா தலைவா... எழுந்து வா தலைவா... என அழுது கதறி வருகின்றனர்.