நிறைவேறியது கருணாநிதியின் ஆசை!!

By karthikeyan VFirst Published Aug 8, 2018, 2:14 PM IST
Highlights

கருணாநிதி அடக்கம் செய்யப்பட உள்ள சந்தனப்பேழையில், கருணாநிதியின் ஆசைப்படி எழுதப்பட்டுள்ளது. 

கருணாநிதியின் ஆசைப்படியே அவர் அடக்கம் செய்யப்பட உள்ள சந்தனப்பேழையில் எழுதப்பட்டிருக்கிறது. 

கருணாநிதி என்றால் உடனே நினைவுக்கு வரக்கூடிய விஷயங்கள் உழைப்பு மற்றும் சுறுசுறுப்பு. மிகவும் சுறுசுறுப்பானவர் கருணாநிதி. வயது முதிர்வின் காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வெடுத்த காலத்திலும் தினமும் மாலை அண்ணா அறிவாலயத்திற்கு சென்றுவிடுவார். உடல்நிலை சற்று கூடுதலாக மோசமடைந்த பிறகுதான், தினமும் செல்வதைத் தவிர்த்து அவ்வப்போது சென்றுவந்தார். 

கருணாநிதி கடுமையான உழைப்பாளி. அவரது உழைப்பும் சுறுசுறுப்பும் தான் 94 வயது வரை அவரை இயக்கி கொண்டிருந்தது என்று கூறினால் மிகையாகாது. கருணாநிதி இறந்தவிட்ட நிலையில், அவரை அடக்கம் செய்வதற்கான சந்தனப்பேழை தயார் செய்யப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. 

அந்த சந்தனப்பேழையில் அவரது ஆசைப்படி, ஒரு கூற்று எழுதப்பட்டுள்ளது. தான் இறந்துவிட்டால் தனது நினைவிடத்தில் என்ன எழுதவேண்டும் என்பதை முன்கூட்டியே கூறிவிட்டார் கருணாநிதி. ”ஓய்வு எடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று தனது நினைவிடத்தில் எழுத சொல்லியிருக்கிறார் கருணாநிதி. இந்த தகவலை கருணாநிதியின் மறைவுக்கு பிறகு ஸ்டாலின் தனது கைப்பட எழுதியிருந்த கடிதத்தில் கூட குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், கருணாநிதியின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அவர் அடக்கம் செய்யப்பட இருக்கும் சந்தனப்பேழையில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என எழுதப்பட்டுள்ளது. 
 

click me!