இரண்டு மாதங்களுக்கு பின்னர் திமுக தலைவர் கருணாநிதி படம் வெளியானது

First Published Nov 24, 2016, 2:10 PM IST
Highlights


திமுக தலைவர் கருணாநிதி சுறுசுறுப்புக்கு பெயர் போனவர். ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் என்று அவரது தொண்டர்கள் பெருமையாக குறிப்பிடுவர். அந்த அளவுக்கு கட்சிப்பணி இலக்கியப்பணியில் பம்பரமாக சுழன்று தொண்டர்களை உற்சாகப்படுத்தும் தலைவர்.
 தலைவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜோதி பாசு , ஈஎம்.எஸ். நம்பூத்ரி பாடு ஆகியோர் ஓய்வறியா உழைப்பாளிகள் என பெயரெடுத்தவர்கள் , அதே அளவுக்கு ஓய்வறியா உழைப்பாளியாக 92 வயதிலும் செயல்பட்டு வருபவர் கருணாநிதி.
தமிழக தலைவர்களில் பத்திரிக்கையாளர்களை தினசரி சந்திப்பவரும், நவீன விஷயங்களை கையாளும் திறன் பெற்றவர் கருணாநிதி முதலிடத்தில் இருப்பார். தினசரி கட்சி அலுவலகம் வந்து கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள், செய்தியாளர்களை சந்திக்க அவர் தயங்கியதே இல்லை. 


 கலைஞர் கடிதம் கின்னஸ் சாதனைக்கு அனுப்பப்படும் அளவுக்கு எழுதியுள்ளார். 92 வயதிலும் அவரது பழுத்த அனுபபவத்தின் முன் , அரசியலை அணுகும் விதத்துக்கு முன்பு திமுகவில் அனைவரும் அவரது மாணாக்கர்கள்தான். 
இந்நிலையில் மாத்திரை சாப்பிட்டதில் ஒவ்வாமை காரணமாக கருணாநிதி வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இரண்டு மாதம் கட்டி போட்டது. ஆனாலும் தகுந்த நேரத்தில் அவரது கடிதங்கள் வந்து கொண்டுதான் இருந்தது. 
தலைவருக்கு என்ன ஆனது என தொண்டர்கள் தவிக்க அனைவரும் சந்தோஷப்படும் வண்ணம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதி தனது படத்தை வெளியிட்டுள்ளார். அவரை பேராசிரியர் அன்பழகன் விசாரிப்பது போல அருகில் மு.க.ஸ்டாலின் நிற்பது போன்ற படத்தை டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

click me!