இந்திய துணைக்கண்டத்தில் தனித்துவம் மிக்கவராக, அறிவாற்றலுடன் திகழ்ந்தவர் கருணாநிதி. ஆளுநர் புகழாரம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2021, 7:08 PM IST
Highlights

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்திறப்புவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். 

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்திறப்புவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன்.தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தரான கருணாநிதியின் திருஉருவப்படம் சட்டமன்றத் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னேறிய மாநிலங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. அதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி, இதுவரை இருந்த அனைத்து முதல்வர்களும் சட்டப்பேரவையின் மாண்பை காப்பாற்றியுள்ளனர். இந்த சட்டமன்றத்தில் சமூக நீதிக்காக தீர்மானங்கள், சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அண்ணா சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றினார்.

அதேபோல தனது பேச்சாற்றலால் மக்களைக் கவர்ந்து வைத்திருந்தவர் கருணாநிதி. மிகச்சிறிய வயதில், 13 வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்தவர். தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி  பெற்றவர் அவர். ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. பல்வேறு துறைகளிலும் தனித்துவத்துடனும், அறிவாற்றலுடனும் திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இந்திய அரசியல்வாதிகள் குறிப்பிடத்தக்க தனித்துவமிக்கவாக கருணாநிதி விளங்கினார். 

அடித்தட்டு மக்களை வறுமையில் இருந்து மீட்கவும், அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தரவும் அயராது பாடுபட்டவர் அவர். குறிப்பாக சைக்கிள் ரிக்ஷா முறையை ஒழித்தவர், இத்தனை ஆண்டு அரசியல் வாழ்க்கையில் தமிழர்களின் வாழ்வில் ஓளியேற்றியவர் கருணாநிதி. ஏழை எளிய மக்களின் இதயங்களை வென்றவர், குடிசைகளுக்கு பதிலாக குடியிருப்புகளை உருவாக்கி கொடுத்தவர். தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க சமத்துவபுரங்கள் அமைத்தவர், 70 ஆண்டு கால அரசியல் வாழ்வில் இந்தியாவின் அனைத்து குடியரசுத் தலைவர்களுக்கும் மிக நெருக்கமாக இருந்தவர் கருணாநிதி. இவ்வாறு அவர் பேசினார். 
 

click me!