BP நார்மல்... இதய துடிப்பு நார்மல்!!! சிறுநீரக தொற்று மட்டுமே பிரச்சனை... தேறி வரும் கலைஞர்!

 
Published : Jul 28, 2018, 11:48 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
BP நார்மல்... இதய துடிப்பு நார்மல்!!!  சிறுநீரக தொற்று மட்டுமே பிரச்சனை... தேறி வரும் கலைஞர்!

சுருக்கம்

karunanidhi health condition imroving

திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் அவரது உடல்நலம் தேறிவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக ஓய்வு எடுத்து வருகிறார். நேற்று முன் தினம் கருணாநிதிக்கு திடீரென உடல்நலம் சற்று மோசமடைந்தது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று விசாரித்துவந்தனர். கருணாநிதியின் உடல்நலம் நன்றாக இருக்கிறது. காய்ச்சல் மட்டும்தான் இருக்கிறது. அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்த தனி மருத்துவர் கோபால், மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கலாம் என அறிவுறுத்தினார். இதையடுத்து காவேரி மருத்துவமனையில் இருந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார்.

காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கருணாநிதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பிறகு, அவரது ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் உடல்நலம் தேறிவருவதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்திருந்தார். 

இன்று காலை முதல்வர் பழனிசாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் ஆகியோரும் காவேரி மருத்துவமனைக்கு சென்று உடல்நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் ரத்த அழுத்தம், பல்ஸ், இதயத்துடிப்பு என ஆகியவை இயல்பு நிலைக்கு வந்துள்ளதாகவும் சிறுநீரக தொற்றுக்கு மட்டும்தான் சிகிச்சை அளிப்பது பிரச்னையாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வரை தொண்டனுக்கு இணையாக உழைத்துக் கொண்டிருந்த கலைஞர் கருணாநிதியின் அயராத உழைப்பும், மனம் தளராத தன்னம்பிக்கை மட்டுமே அவரை இந்த அபாய கட்டத்தையும் தாண்டி வந்துவிட்டார். நொடிக்கு நொடி தேறிவரும் தலைவனை பார்க்க லட்சக் கணக்கான தொண்டர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!