கதறி அழுத ஸ்டாலின்!! 1000 நினைவுகள்... சோகமாகிப் போன கோபாலபுரம்!

First Published Jul 28, 2018, 11:27 AM IST
Highlights
Stalin cry Karunanidhi was admitted to Kauvery Hospital


கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியை ஆம்புலன்சில் ஏற்றும்போது மு.க.ஸ்டாலின் கண்ணீர்விட்டு அழுதார். தொண்டர்கள் அனைவரும் கதறி அழுதனர். இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

நேற்று இரவு 10.20 மணி அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மற்றும் பல திமுக நிர்வாகிகள் கோபாலபுரம் வந்து நலன் விசாரித்துச் சென்ற நிலையில் அதுவரை அங்கே இருந்த ஸ்டாலின் தன் இல்லத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார். அதன் பின் கொஞ்ச நேரத்தில் கோபாலபுரத்தில் கருணாநிதியைக் கண்காணித்துவந்த டாக்டர்களில் ஒரு சிலர் மட்டும் புறப்பட்டனர். மற்ற டாக்டர்கள் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டிருந்தனர்.

திடீரென இரவு 11.45 மணியளவில் ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்த ஸ்டாலினுக்கு ‘தலைவருக்கு ரொம்ப முடியலை. ரத்த அழுத்தம் இறங்கிக்கிட்டே இருக்கு’ என்ற தகவல் கிடைத்ததை அடுத்துதான் உடனே  அவசர அவசரமாக கோபாலபுரத்துக்கு வந்தார். அப்போது அழகிரி, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் அங்கே ஸ்டாலினின் வருகைக்காக காத்திருந்தனர்.

இதையடுத்து க்ருணாநிதியின் தனிப்பட்ட மருத்துவர் கோபால், காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் அவசரமாக கோபாலபுரம் வந்தனர். உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் அவசர அவசரமாக அங்கு வந்தனர். தொடர்ந்து டாக்டர்கள் அறிவுரைப்படி கருணாநிதியை காவேரி மருத்துவமனையில் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. அப்போது கருணாநிதியை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிய போது ஸ்டாலின் கதறி அழுதார். அங்கு கூடியிருந்த தொண்டர்களும் ஸ்டாலினை பார்த்ததும்  உடன் இருந்த துரை முருகன், ஜெகத் ரட்சகன் ஆகியோரும் கண்கலங்கி நின்றனர். தமிழன் பிரசன்னா கதறி அழுதார். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் தலைவா,, தலைவா.. எழுந்து வா… டாக்டர் கலைஞர் வாழ்க.. என கோஷமிட்டபடி கதறி அழுதனர்.

ஆயிரம் நினைவுகளை சுமந்து நிற்க்கும் இந்த கோபாலபுரத்தில் தன் தந்தை ஆம்புலன்ஸ் வாகனத்தில் எடுத்துச் சென்ற காட்சியை கண்ட ஸ்டாலின் கதறி அழுதது.  தந்தை மீது மகன் வைத்திருக்கும் பாசம்  வெளிப்பட்டது. சோகம் மட்டுமே நிலவியது!

click me!