ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்குப் போன கருணாநிதி… சக்கர நாற்காலி இல்லாமல் முதன் முதலில் வீட்டில் இருந்து சென்ற திமுக தலைவர்!!

First Published Jul 28, 2018, 10:27 AM IST
Highlights
karunanidhi went out from house with wheel chair


திமுக தலைவர் கருணாநிதி அறிவாலயத்துக்கோ அல்லது ஆஸ்பத்திரிக்கோ தனது சக்கர நாற்காலி இல்லாமல் முதன்முதலில் தற்போது தான் ஆம்புலன்சில் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார் என திமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

கருணாநிதி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் உடல் நலக்குறைவு காரணமாக கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார், அவ்வப்போது ஏற்படும் உடல் குறைவு ஏற்பட்டால் அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் மனுமதிக்கப்பட்டு கருணாநிதிக்கு சிகிக்சை அளிக்கப்படும். மருத்துவமனை செல்லும்போதெல்லாம் அவர் தனது சக்கர நாற்காலியிலேயே செல்வார்.

2016 ஆம் ஆண்டுக்கு முன்பு அறிவாலயத்துக்கோ அல்லது ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு வெளியே செல்லும்போது  சக்கர நாற்காலியில் தான் சென்று வருவார். அந்த அளவுக்கு சக்கர நாற்காலிக்கும் , கருணாநிதிக்கும் ஒரு மாறாத பந்தம் இருந்து வந்தது.

இன்றைய தலைமுறையினருக்கு கருணாநிதியை நினைவு படுத்திப் பார்க்க வேண்டும் என்றால், கண்டிப்பாக சக்கரநாற்காலிதான் ஞாபகத்துக்கு வரும்.

இந்நிலையில் கடந்த 3  நாட்களாக கருணாநிதி கடுமையாக உடல்நலம் குன்றி காயப்படுகிறார். சிறுநீரக பாதையில் தொற்று, காய்ச்சல் என தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்.

நேற்று இரவு அவருக்கு திடீரென ரத்த அழுத்தக்குறைவு ஏற்பட்டது. இதனால் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து காவேரி மருத்துவமனையில் இருந்து அவசரமாக ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு கருணாநிதி அதில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டார். அப்போது தொண்டர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

சக்கர நாற்காலி இல்லாமல் முதன்முதலாக இப்படி ஸ்ட்ரேச்சரில் போறீங்களே ! தலைவரே என தொண்டர்கள் உரக்க சத்தமிட்டு கதறி அழுதனர். இதனைப் பார்த்த மு.க.ஸ்டாலினும் கண்ணீர்விட்டு அழுதார். மேலும் அங்கிருந்த திமுக நிர்வாகிகளும் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

click me!